கடைசியா ஆரியையும் அழ வச்சிட்டீங்களே.. பிக் பாஸ் கேட்ட அந்த கேள்வி? வைரலாகும் அன்சீன் புரமோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவில் ஆரி அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பிக் பாஸ் வீட்டில் சோலோ சிங்கமாக கேம் ஆடி வரும் ஆரியையும் பிக் பாஸ் அழ வைத்து விட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கன்ஃபெஷன் ரூமில் ஒவ்வொரு போட்டியாளராக அழைத்து அழ வைத்து அனுப்பி வருகிறார் பிக் பாஸ்.

அன்சீன் புரமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 புரமோக்களும் இன்று வெளியான நிலையில், அடுத்ததாக விஜய் மியூசிக்கில் அன்சீன் புரமோவும் நேரத்துக்கு வந்து வைரலாகி வருகிறது. யூடியூப் மற்றும் ட்விட்டரில் வெளியிடப்படும் புரமோ வீடியோக்கள் தினமும் ஏகப்பட்ட மில்லியன் வியூக்களை அள்ளி வருகிறது.

ஆரியையும் அழ வச்சிட்டார்
இந்த வாரம் முழுவதும் ஷிவானி முதல் அர்ச்சனா வரை ஒவ்வொரு போட்டியாளர்களாக கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து அழ வைத்து அனுப்பி வருகிறார் பிக் பாஸ். அழுகை, கோபம், அன்பு, ஆனந்தம் உள்ளிட்ட மனித உணர்ச்சிகளின் பிணைப்பை மையமாக கொண்டு விளையாடப்படும் பிக் பாஸ் கேம் ஷோவில் ஆரியையும் பிக் பாஸ் அழ வச்சிட்டார்.

என்டர்டெயின் பண்ணல
இந்த பிக் பாஸ் வீட்டில் ஒரு என்டர்டெயினரா உங்களை இன்னும் முழுமையா வெளிப்படுத்திக் கொள்ளவில்லையா? என ஆரியிடம் பிக் பாஸ் கேட்டதும், அதுவரை அழக் கூடாது என நினைத்து இருந்த ஆரியும் அழத் தொடங்கி விட்டார். ஆனால், இதனை அன்சீன் புரமோவில் வைத்ததை பார்த்த ரசிகர்கள், நிகழ்ச்சியிலேயே வைங்க என கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

காயப்படுத்த விரும்பல
நகைச்சுவை என்று வந்துவிட்டால், ஒருவரை உடல் ரீதியாக கலாய்க்கவும், மட்டம் தட்டியும் பேச வேண்டி வரும், ஆனால், நான் அவ்வாறு மற்றவரை காயப்படுத்த விரும்பல. அப்படி ஒரு என்டர்டெயின் பண்ண நான் நினைக்கல என பிக் பாஸுக்கு பதில் சொல்கிறார் அரி. சண்டையில் மட்டும் அடுத்தவரை அன்ஃபிட் என்று சொல்லி காயப்படுத்துவது ஏன் ஆரி என்கிற கேள்வியும் அவர் மீது எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











