கப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 சீசன் கிராண்ட் ஃபினாலேவை கடைசியில் பாசத்தால் நிறைத்து நனைத்து விட்டார் ஆரியின் மகள் ரியா.

Recommended Video

Aari யின் வெற்றியை பாராட்டிய Bigg Boss போட்டியாளர்கள் - Filmibeat Tamil

தன் பேத்தியை பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து ஓடும் தாத்தாவை போல கமல்ஹாசன் ஆரியின் மனைவியிடம் இருந்து ரியாவை தூக்கிக் கொண்டு மேடையை அலங்கரித்ததும், ரியா கமலுக்கு கொடுத்த அன்பு முத்தமும் கடைசி தருணங்களை என்றுமே மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது.

டைட்டில் வின்னர் கப் மற்றும் 50 லட்சம் பணப்பெட்டியை கீழே வைத்து செல்ல மகளை தூக்கி நின்ற ஆரி அர்ஜுனன் டைட்டிலுக்கு தகுதியானவர் தான்.

பெருசா ஒன்றும் இல்லை

பெருசா ஒன்றும் இல்லை

பிக் பாஸ் தமிழ் 4 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி 6 மணி நேர ஷோவாக நடைபெற்றது. ஆனால், சினிமா துறையை சார்ந்த பிரபல விருந்தினர்கள் யாரும் கலந்து கொள்ளாதது மற்றும் ஷிவானி, கேபி, சனம் உள்ளிட்டோரின் நடன நிகழ்ச்சி என எதுவுமே பெருசா இல்லை. குக் வித் கோமாளிக்கு சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி வந்தது போல பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு வந்திருந்தால் இன்னமும் நிகழ்ச்சி களைகட்டியிருக்கும்.

முகேன், கவின், ஷெரின்

முகேன், கவின், ஷெரின்

அதற்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன் போட்டியாளர்களான முகேன் ராவ், கவின் மற்றும் ஷெரின் மட்டுமே ஸ்பெஷல் கெஸ்ட்டாக வந்து, சோமசேகர், ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ ராஜை எவிக்ட் செய்து பிக் பாஸ் மேடைக்கு அழைத்து வந்தனர். முகேன் ராவ் பண்ண சேட்டை, கவின் ஆடிய வாத்தி கம்மிங் டான்ஸ், பாலாவிடம் சண்டை போட்ட ஷெரின் என சில தருணங்கள் மட்டுமே சுவாரஸ்யத்தை கொடுத்தது.

வொர்த் இல்லை

வொர்த் இல்லை

6 மணி நேர ஷோவை இப்படி ரம்பம் போடுறீங்களே என ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் நெளிந்து கொண்டே வேற வழியின்றி கிராண்ட் ஃபினாலேவை பார்த்து வந்தனர். அர்ச்சனா, சம்யுக்தா நடனங்களும், ஆஜீத், வேல்முருகன், சுசித்ராவின் பாடல்களும் தான் தேவையில்லாத ஆணியாக 3 மணி நேர ஷோவை கடத்தியது.

ஆரி கையை உயர்த்தி

ஆரி கையை உயர்த்தி

கடைசியா ரியோ ராஜ் எவிக்ட் ஆன பின்னர் சிரித்ததும் தான் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியே ஆரம்பமானது போல இருந்தது. மேடைக்கு பாலாவையும் ஆரியையும் அழைத்து வந்த கமல், ஆரியை டைட்டில் வின்னராக அறிவித்தபோது ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது. ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆரி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

தாத்தா கமல்

தாத்தா கமல்

இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியிலே கடைசியாக நிகழ்ந்த சில தருணங்கள் மட்டுமே கிராண்ட் ஃபினாலேவை சிறப்பாக மாற்றியது. அதில் பெரும்பங்கு ஆரியின் மகள் ரியாவுக்கே சேரும். அப்பா வென்றுவிட்டதும், தம்ப்ஸ் அப் காட்டி கண்ணீர் விட்ட ரியாவை கமல் தனது பேத்தியை போல தூக்கிக் கொஞ்சியது அழகின் சிரிப்பு.

கப்பும் காசும் கீழே

கப்பும் காசும் கீழே

டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனனுக்கு கோப்பையை பாலாஜியின் கையால் கொடுக்க வைத்து அழகு பார்த்த கமல், ஆரியின் மகள் ரியாவை வைத்து 50 லட்சம் ரூபாய் பெட்டியையும் கொடுத்தார். ஆனால், அடுத்த நொடியே அவை இரண்டையும் கீழே வைத்து விட்டு தனது மகள் ரியாவை ஆரி தூக்கி நின்ற தருணம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. ஆரி நிச்சயம் டைட்டிலுக்கு தகுதியானவர் தான் என்பது அவரது ஹேட்டர்ஸ்க்கும் புரிந்திருக்கும்.

கமலுக்கு முத்தம்

கமலுக்கு முத்தம்

அப்பா ஆரியை எல்லாருமே கொண்டாடுவதை பார்த்து சந்தோஷப்பட்ட ரியா, ஆரிக்கு முத்தம் கொடுத்தார். கமல் மாமாவுக்கு முத்தம் கொடுங்க என அழகா ஆரி சொன்னதும், கமல் தனது கன்னத்தை குழந்தை ரியாவிடம் காட்ட, ரியாவும் முத்தம் கொடுத்தார். இந்த கிராண்ட் ஃபினாலேவை பாசத்தால் நனைத்துவிட்டார் ரியா என கமல் பாராட்ட கிராண்ட் ஃபினாலே இனிதே முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X