இந்த காரணத்துக்காகத் தான்.. டிக்கெட் டு ஃபினாலேவை சரியா ஆடல.. கமலுக்கு விளக்கம் சொன்ன ஆரி!

சென்னை: டிக்கெட் டு ஃபினாலேவின் 9 டாஸ்க்குகளிலும் சேர்த்து கடைசி இடத்தை பெற்ற ஆரியிடம் கமல் காரணம் கேட்க, அதற்கான பதிலை சொன்னார் ஆரி.

கடந்த வார இறுதியில் நடந்த கசப்பான அனுபவங்கள் தான் இந்த வாரம் அவரை விளையாட விடவில்லை என்றார்.

மேலும், எப்படி இருந்தாலும் ஹவுஸ்மேட்கள் தனக்கு குறைவான மதிப்பெண்கள் தான் தருவார்கள் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

ஆரி தான் கம்மி

ஆரி தான் கம்மி

டிக்கெட் டு ஃபினாலேவில் இடம்பெற்ற மொத்தம் 9 டாஸ்க்குகளிலும் சேர்த்து ஆரி பெற்ற மதிப்பெண் வெறும் 27 மட்டும் தான். இப்போ இருக்கிற 7 போட்டியாளர்களில் கடைசி இடம் ஆரிக்குத் தான். ஒரு போட்டியில் கூட 7 மதிப்பெண்களை ஆரி வாங்கவில்லை. ஆரம்பத்தில் 5 மதிப்பெண் வாங்கிய ஆரி, போக போக கடைசி ஆக்கப்பட்டார்.

அடுத்த இடத்தில்

அடுத்த இடத்தில்

ஆரிக்கு அடுத்த இடத்தில் கேபி மற்றும் பாலா தலா 33 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்தனர். முதல் போட்டியில் 7 மூன்றாவது போட்டியில் 7 மதிப்பெண்களை பெற்ற பாலா, அதன் பின்னர் ஆரியுடன் நடந்த வாக்குவாதம் காரணமாக சரிவை சந்தித்தார். மேலும், நிறைய போட்டிகள் ஹவுஸ்மேட்கள் ஓட்டு அடிப்படையில் சென்றதாலே பாலாவும், ஆரியும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர் என்பதை இருவரும் புரிந்து கொண்டனர்.

கமல் கேள்வி

கமல் கேள்வி

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் ஆரி ஏன் ரொம்ப குறைவான மதிப்பெண் எடுத்து இருக்கீங்க, பாலாவோ அல்லது ஆரியோ தான் ஜெயிப்பாங்கன்னு நினைச்சேன் என கமல் கேட்டதும், இந்த வாரமே ஏதோ ரொம்ப உடல் நலம் சரியில்லாத மாதிரி உணர்ந்தேன் சார். எதிலும் ஃபிட்டாக இல்லை என மனதளவில் கடந்த வாரம் உடைந்ததை பற்றி கூறினார் ஆரி.

தோள் வலி

தோள் வலி

மேலும், தோளில் ஏற்பட்ட வலி காரணமாக பலூனை பிடித்து தன்னால் நிற்க முடியவில்லை. இடது கையில் ஆரம்பத்திலேயே பிடித்து இருந்தால், அதிக நேரம் நின்று இருப்பேன் என நினைக்கிறேன். ஆனால், அப்போது அதை செய்ய தவறிவிட்டேன். மேலும், என்ன செஞ்சாலும் நமக்கு கடைசி இடம் தான் கொடுப்பாங்கன்னு நினைச்சே விட்டுட்டேன் என்றார்.

அது தேவையில்லை

அது தேவையில்லை

மக்களின் ஓட்டுக்களை பிடித்து விட்ட ஆரிக்கு டிக்கெட் டு ஃபினாலே தேவையே இல்லாத நிலை உருவானது. சோமசேகரை தொடர்ந்து இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக ஆரி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். பிக் பாஸ் வீட்டு மக்கள் தன்னை நம்பவில்லை என்றாலும், வெளியே உள்ள பல கோடி மக்கள் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைப்பாங்க என ஆரி நினைத்தது போலவே கடைசியில் நடந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X