இந்த விளையாட்டு விளையாடுறதுக்கு நீங்க வேற ஏதாச்சும் செய்யலாம்.. ஆவேசமான ஆரி.. பரபரக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதன்படி ஹவுஸ்மேட்ஸ் அரக்கர்களாகவும் அரசர்களாகவும் உள்ளனர்.
நேற்று வேல்முருகன் தலைமையில் சொர்க்காபுரி அரசர்களாக ஒரு குழுவும், சுரேஷ் சக்கரவர்த்தி தலைமையில் அரக்கர்களாக ஒரு குழுவும் இருந்தது.

முதல் புரமோ
அரக்கக்கூட்டம் அரசர்களை அசைய வைத்து தங்களுக்கு அடிமையாக்க வேண்டும் என்பதே போட்டியின் கண்டிஷன். இந்நிலையில் இன்றைய எபிசோடின் முதல் புரமோ வெளியாகி உள்ளது.

அரசரான சுரேஷ்
இதில் நாடாய் அல்லது காடாய் டாஸ்க்கின் இரண்டாம் பகுதியாக அரக்க குடும்பம் அரச குடும்பமாகவும் அரச குடும்பம் அரக்க குடும்பமாகவும் மாறியுள்ளது. அதன்படி சொர்க்கபுரியின் அரசராக சுரேஷ் சக்கரவர்த்தியும் ராணியாக அர்ச்சனாவும் உள்ளனர்.

ஆரி வாக்குவாதம்
இதில் சொர்க்கபுரியை காப்பாற்ற இளவரசரான ஆரி அரக்கர்களிடம் செல்கிறார். அப்போது பாடாய் படுத்தி அவரை அரக்கக்கூட்டம் அடிமையாக்கி விட்டதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்காத இளவரசரான ஆரி, என்னை பிஸிக்கலாக டிஸ்டர்ப் செய்து விட்டீர்கள் என வாக்குவாதம் செய்கிறார்.

வேற ஏதாவது செய்யலாம்
அரக்க குடும்பத்திற்கும் ஆரிக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, ஆவேசமான ஆரி இந்த விளையாட்டு விளையாடுவதற்கு நீங்கள் ஏதாவது செய்யலாம் என கடுமையாக பேசுகிறார். இதனால் மொத்த அரக்க குடும்பத்தின் முகமும் மாறுகிறது.

முற்றிய மோதல்
இதன் பிறகு என்ன நடக்கப்போகிறது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், இன்று நல்ல எண்டெர்ய்ன்மென்ட் இருக்கும் என தெரிகிறது என இப்போதே தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











