கண்கலங்கிய ஆரி.. தன்னால பாலாவுக்கு கிடைக்கலையோன்னு ஃபீலிங்.. துடித்துப் போன பாலா.. வேற லெவல்!
சென்னை: கயிறு இழுக்கும் போட்டியில், பாலாவுக்கு கடைசி இடமும் அதற்கு அடுத்த இடத்தை ஆரிக்கு கொடுத்ததும் ரொம்பவே அப்செட் ஆனார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அடுத்த வாரத்தோடு முடிவடைகிறது. இறுதி வாரத்துக்கு முந்தைய வாரத்தில் ஆரியும் பாலாவும் இணைந்து விட்டனர்.
ஆரி கண்கலங்கிய அந்த தருணம் பாலாவை துடித்துப் போக செய்ததை பார்த்த ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

ரூல்ஸ் தேவையில்லை
ரூல்ஸை மீறி விளையாடிய ரியோ, சோம் மற்றும் கேபிக்கு அதிக புள்ளிகள் கிடைத்த நிலையில், பாலாவிடம் மன்னிப்பு கேட்டார் ஆரி. நீ விளையாடிய முறை தான் சரி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரூல்ஸை மதிச்சு விளையாடக் கூடாது என்பது இப்போதான் எனக்கு புரிகிறது என பாலாவை ஆரி பாராட்டினார்.

கண்கலங்கிய ஆரி
எந்தவொரு துன்ப நேரத்திலும் கலங்காமல் கல் நெஞ்சோடு கம்பீரமாக ஒரு சிங்கம் போல இருந்த ஆரி, தன்னால், பாலாவின் ஸ்கோர் சரிந்து விட்டதே என நினைத்து, ரொம்ப கில்டியாக ஃபீல் பண்ணி கண்கலங்கிட்டார். ஆரி அப்படி கலங்கியதை பாலாவால் பார்த்து சந்தோஷம் பட முடியவில்லை. அந்த மனசு போதும் பாலாவும் ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டார்.

துடித்துப் போன பாலா
தனக்கு இந்த பிக் பாஸ் வீட்டில் வில்லனாக பார்க்கும் ஆரி, அப்படி கண்கலங்குவதை பார்த்து பாலாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. துடித்துப் போய், நீங்க அழாதீங்க பிரதர் என கட்டித் தழுவி ஆரிக்கு பாலா ஆறுதல் சொன்ன விதமும் இருவரும் கடைசி நேரத்தில் சேர்ந்து கொண்டதும் சூப்பர்.

கேம் புரியாம
பிக் பாஸ் கேம் புரியாமல் விளையாடியது இந்த இருவர் தான் என்று சொல்லலாம். ஆனால், ஆரியின் நேர்மைக்கும், பாலாவின் துணிவுக்கும் அவர்களை தொடர்ந்து மக்கள் காப்பாற்றி கடைசி வாரம் வரை கொண்டு வந்து விட்டனர். பாலா ஆரி சண்டையில் நல்லா குளிர் காய்ந்த சிலர், ஃபைனலுக்கு சென்றதை ரசிகர்கள் விரும்பவில்லை.

காட்ஃபாதர் ஆரி
வெளியே போனால் ஆரியை இன்டர்நெட்டில் கூட பார்க்க மாட்டேன், யார் வெற்றி பெற்றாலும் கவலைப்படமாட்டேன், ஆரி வெற்றிப்பெற்றால் கமல் சாரிடமே கேட்பேன் என பேசிய பாலா, முதல் முறையாக வெளியே போனாலும், தேவையான நேரங்களில் ஆரி அண்ணனிடம் அறிவுரை கேட்பேன் என சொல்லி நெஞ்சை நக்கி விட்டார்.

மோதலில் ஆரம்பித்து காதல்
பாலாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனம் ஷெட்டி சீக்கிரமே வெளியேற்றப்பட்ட நிலையில், ஆரிக்கும் பாலாவுக்கும் கடைசியில் இப்படியொரு அழகான தருணம் இந்த சீசன் பிக் பாஸில் நடந்துள்ளது. மோதலில் தொடங்கி காதலில் முடிந்தது என ரம்யா நல்லாவே கிண்டல் செய்தார்.

வாழ்த்திய கமல்
வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலேயே பார்த்த கமல், இந்த மன மாற்றம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி. ரொம்ப தாமதமாக இவர்கள் ஒன்று சேர்ந்தாலும், அந்த தருணம் ரொம்பவே அற்புதமாக இருந்தது. இருவருக்கும் வெளியே நல்லதொரு எதிர்காலம் இருக்கு என கமல் இருவரையும் வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











