படத்தை மெகா ஹிட்டாக்க ஆரி செய்த வேலை...டிரெண்டிங் ஆக்க தயாராகும் ரசிகர்கள்
சென்னை : ஷங்கர் தயாரிப்பில், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, அஞ்சலி நடித்த ரெட்டை சுழி படத்தின் மூலம் அறிமுகமானவர், ஆரி அர்ஜூனன். அவரது மூன்றாவது படமான நெடுஞ்சாலை படத்தில் ஆரியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
சமூக பணிகளால் பலரின் ஆதரவை பெற்ற ஆரி, பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்றதன் மூலம் மேலும் புகழடைந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரியின் நேர்மையான நடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று, பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் நடிப்பு வேலைகளை துவக்கி உள்ளார் ஆரி. சில படங்களில் தற்போது நடித்து வரும் ஆரி, தான் ஏற்கனவே நடித்துள்ள பகவான் படம் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பகவான் படம் திருவண்ணாமலை அருகில் உள்ள செஞ்சி கோட்டையில் படமாக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஆரியின் தோற்றம் பலரையும் கவர்ந்ததாக இருந்தது.
தற்போது இந்த படத்தில் தனது கேரக்டரின் பெயர் ஜோசப் விஜய் என்ற ரகசியத்தை ஆரி வெளியிட்டுள்ளார். இதனால் இந்த படம் விஜய் ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை கலிங்கன் எழுதி, இயக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











