ஆரியிடம் கேள்வி கேட்ட காலர்.. அம்பி என பெட்ரூமில் மோசமாய் கலாய்த்த 'விஷ பாட்டில்' ரம்யா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலரின் கேள்விக்கு ஆரி பதில் சொன்னதை பார்த்து பாலாஜி மற்றும் ரியோவின் முகத்தில் ஈயாடவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக வாரம் தோறும் ஒரு காலர் ஹவுஸ்மேட்ஸிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் கோவையை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆரிக்கு காலராக வந்தார். ஆரியிடம் பேசும் முன்பாக கமலிடம் சில கேள்விகளை கேட்டார் ரமேஷ்.

கமலிடம் கேள்வி

கமலிடம் கேள்வி

அவர் பேசியதாவது, தேர்தல் பிரச்சாரம் செய்கிறீர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறீர்கள், திரைப்பட பணிகளை செய்கிறீர்கள், எங்களுக்கு புத்தகங்களையும் பரிந்துரை செய்கிறீர்கள் எப்படி நேரம் இருக்கிறது ஓய்வெடுக்க என்று கேட்டார்.

கமல் பதில்

கமல் பதில்

அதற்கு பதில் சொன்ன கமல் எனக்கு ஓய்வு என்பது படுத்து உடனே தூக்கம் வந்துவிடும். மக்களை பார்ப்பதே எனக்கு புத்துணர்ச்சிதான். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எனக்கும் கொடுக்கும் வரவேற்பே எனக்கு புத்துணர்ச்சியை கொடுத்து விடுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுதான் எனக்கு சந்தோஷம் என்றார்.

அம்பியை பிடிக்காது

அம்பியை பிடிக்காது

தொடர்ந்து ஆரியிடம் பேசினார் அந்த காலர், அந்நியன் படத்தில் அம்பி என்ற நல்ல கேரக்டர் வரும். ஆனால் அந்த கேரக்டரை யாருமே விரும்ப மாட்டார்கள். ஏன்னா அவரு எல்லாத்துக்கும் எதிக்ஸ், ரூல்ஸ், ரெகுலேஷன்னு பேசிக்கிட்டே இருப்பாரு.

பாதிக்காதா?

பாதிக்காதா?

இங்க பிக்பாஸ் வீட்டுல எல்லா ஹவுஸ்மேட்ஸும் சராசரி மனுஷங்களா உலா வரும் போது நீங்க இப்படி பேசுவது சக ஹவுஸ்மேட்ஸுடன் இணக்கமான சூழல உங்களுக்கு பாதிக்காதா? அதை ஏன் தொடருறீங்க? முகத்துக்கு நேரா எல்லா கேள்வியும் கேட்டு விடுகிறீர்கள் என்று கேட்டார்.

இணக்கம் பண்ண வரல

இணக்கம் பண்ண வரல

அதற்கு பதில் கூறிய ஆரி, இணக்கம் பண்ணிக்கிறதுக்காக நான் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள வரலங்றத, பிக்பாஸ் இந்த வீட்டுக்குள்ள வந்த அன்னைக்கே சொல்லிட்டாரு. இந்த வீட்டுல யாரும் நண்பர்களும் கிடையாது, யாரும் எதிரியும் கிடையாதுன்னு.

தகுதிப்படுத்தும் கேள்வி

தகுதிப்படுத்தும் கேள்வி

எல்லார்க்கிட்டேயும் நான் கேள்வி கேட்பது, எல்லோர் மீதும் நான் குற்றம் வைப்பதற்காக அல்ல. அவர்களை இன்னும் தகுதிப்படுத்துறதுக்கான கேள்வியாதான் நான் பார்க்கிறேன் என்றார். சமூகம் சார்ந்த பல பணிகளை பார்த்து வருவதால் இங்கிருந்து என்ன பண்ண முடியுமோ அதை கமல் சாரின் அறிவுரைக்கு ஏற்ப செய்கிறேன் என்று பதிலளித்தார்.

பாலாஜி கமெண்ட்

பாலாஜி கமெண்ட்

ஆரி பேசும் போதே பாலாஜி, ரியோ ஆகியோரின் முகத்தில் ஈயாடவில்லை. இந்நிலையில் கமல் எபிசோட் முடிந்த பிறகு காட்டப்பட்ட காட்சிகளில் ஆரியிடம் காலர் பேசியதை வைத்து, ரம்யா, பாலாஜி, ஆஜித் ஆகியோ தனியாக ஆரியை கிண்டலடித்து பேசினர். அம்பி என்று பார்த்து பரிதாபப்பட்டு அவரை காப்பாற்றுகிறார்களோ என்று கமெண்டடித்தார் பாலாஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X