புடிச்சவங்களுக்கு ஓட்டுப் போடுறாங்க.. முதலிடத்திற்கு ரியோவுடன் மோதிய ஆரி.. கிடைத்தது என்ன தெரியுமா?

சென்னை: கடந்த சில நாட்களாக பகலிரவு ஆட்டமாக நடந்த பந்து புடிக்கும் போட்டியில், யார் தங்கள் திறமையை காட்டினார்கள் என தங்களை தாங்களே வரிசைப் படுத்தி நிற்க சொன்னார் பிக் பாஸ்.

அடுத்த பிரச்சனைக்கு அழகா வழி வகுத்துட்டாரே என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

முதலிடத்திற்காக ரியோவுடன் பலத்த வாக்குவாதம் பண்ண ஆரிக்கு கடைசியில் கிடைத்தது 5வது இடம் தான்.

நான் தான் சூப்பர்

நான் தான் சூப்பர்

ரம்யா பாண்டியன் முதலிடத்திற்காக வாதிட்ட நிலையில், அடுத்ததாக ரியோ ராஜும் முதல் மூன்று இடங்களுக்கு தான் போட்டியிடுகிறேன் என்றார். ஆரியும் முதலிடத்தை கோர, ஆரிக்கும் ரியோவுக்கும் இடையே மிகப்பெரிய வார்த்தைப் போர் நடைபெற்றது. கடைசியில் ரியோ ராஜ் தன்னுடைய டீமிலேயே தான் தான் சூப்பர் என பேசியது சீக்கிரமே பிரச்சனையை கிளப்பும் என தெரிகிறது.

இதுதான் கார்னர்

இதுதான் கார்னர்

டீமா விளையாடியதால் தான் நீங்க ஜெயிச்சீங்க என்றும், அந்த இரண்டு பெண்கள் விட்டுக் கொடுத்ததால் தான் நீங்க பந்தை பிடித்தீர்கள் என்றும் ரியோவின் விளையாட்டுக்கு எதிராக ஆரி பேசினார். ஏன் தேவையில்லாமல் ரம்யா மற்றும் கேபியின் பெயர்களை இழுக்குறீங்க, இதுக்குப் பேர் தான் கார்னர் பண்றது ஆரி என ரியோ ரொம்பவே கோபப்பட்டார்.

புடிச்சவங்களுக்கு போடுறீங்க

புடிச்சவங்களுக்கு போடுறீங்க

பின்னர் ரியோ, ஆரி மற்றும் ரம்யா முதலிடத்திற்காக போட்டிப் போட்ட நிலையில், ரியோவுக்கு முதலிடமும், ரம்யாவுக்கு இரண்டாவது இடமும் சோமுக்கு மூன்றாவது இடமும் பாலாவுக்கு 4வது இடமும் கிடைத்தது. புடிச்சவங்களுக்கு ஓட்டுப் போடுறீங்க என பேசிய ஆரி, சட்டென பந்து புடிச்சவங்களுக்கு ஓட்டுப் போடுறீங்க என மாற்றினார்.

அரசியல் பேச்சு

அரசியல் பேச்சு

நிச்சயம் இந்த வாரமும் இதை வைத்து கமல்ஹாசன் அரசியல் பேச்சை தாராளமாக பேச ஒரு வாய்ப்பை ஆரி உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் என சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர். ரியோவுக்கு மட்டுமின்றி ரியோ, ரம்யா, சோம் ஆகிய மூவருக்கும் முதல் மூன்று இடங்கள் கிடைத்ததும் பிக் பாஸ் வீட்டில் வரும் நாட்களில் பிரச்சனையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

சோமுக்கு ஏன் 3வது இடம்

சோமுக்கு ஏன் 3வது இடம்

தூங்கி வழிந்து தனது பந்தை விடுத்து அடுத்தவர் பந்தை பிடித்து ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸ் மதிப்பெண்களுக்கும் ஆப்பு வைத்த சோமசேகருக்கு எப்படி மூன்றாவது இடம் கொடுத்தார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆரிக்கு இரண்டு அல்லது மூன்றாவது இடம் கொடுத்திருக்க வேண்டும் இந்த விளையாட்டில் அவரும் சிறப்பாகவே ஆடினார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கழட்டிவிடப்பட்ட கேபி

கழட்டிவிடப்பட்ட கேபி

ஷிவானி உஷாராக முதலிலேயே 8வது இடத்தை பிடித்துக் கொண்ட நிலையில், கேபிக்கு 9வது இடம் தான் கிடைத்தது. சோம் டீமில் இருந்த ரியோ, ரம்யா, சோம் ஆகிய மூவரும் முதல் மூன்று இடங்களை பிடித்த நிலையில், கேபிக்கு ஏன் 9வது இடம் என்ற கேள்வியும், அவங்க டீமே கேபியை கழட்டி விட்டுட்டாங்க என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

இதுதான் ஆர்டரா

இதுதான் ஆர்டரா

இந்த முறை நின்ற ஆர்டரில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெளியேற்றம் இருக்குமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. மேலும், கடைசி இடத்தில் நின்ற கேபி தான் இந்த வாரம் எவிக்ட் ஆவாரா? என்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அடுத்தவர்களின் ஆட்டத்தை கெடுத்த பாலாவுக்கும் சோமுக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் சரியில்லை என்கிற வாதமே வலுத்துவருகிறது. என்ன ஆகப் போகுதோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X