அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரமான இந்த வாரத்தில் மட்டும் ஆரி பெற்றுள்ள வாக்குகளின் வித்தியாசம் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 18 போட்டியாளர்களில் மக்கள் மத்தியில் அதிக மதிப்பையும் செல்வாக்கையும் பெற்ற போட்டியாளராக இருந்து வருபவர் ஆரி.
நேர்மையாகவும் மற்றவர்களின் மனதை புண்படுத்தாமலும் யாரைப் பற்றியும் பின்னால் தவறாக பேசாமலும் இருந்து வருகிறார்.

நிதானம் இழக்காமல்
சக ஹவுஸ்மேட்ஸ் எவ்வளவு காயப்படுத்தினாலும் நிதானம் இழக்காமல் இருந்து வருகிறார். யாரையும் தரக்குறைவாக பேசாமலும் தவறு என்றால் முகத்திற்கு நேராக பேசியும் தீர்த்து வருகிறார்.

ரொம்பவே பிடித்துவிட்டது..
இதனாலேயே மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை காட்டிலும் ஆரி சிறந்த நபராக தெரிகிறார். ஹவுஸ்மேட்டுகளுக்கு ஆரியை பிடிக்காவிட்டாலும் அவர்களின் குடும்பத்திற்கும் பொது மக்களுக்கும் அவரை ரொம்பவே பிடித்துவிட்டது.

ஆரியின் மன உறுதி..
கமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட ஆரியின் பெயரைதான் கத்தி ஆரவாரம் செய்கின்றனர் ரசிகர்கள். மொத்த ஹவுஸ்மேட்ஸும் சேர்ந்து ஆரியை கார்னர் செய்து சண்டை போட்ட போதும் மன உறுதியுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வருகிறார்.

வாரம் தோறும் நாமினேஷன்
இதனால் ஆரிக்குதான் பிக்பாஸ் டைட்டில் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே வாரம்தோறும் நாமினேஷனில் வந்தவர் ஆரி.

டைட்டில் வின்னராக்க வேண்டும்
ஒவ்வொரு வாரமும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை காப்பாற்றினர் மக்கள். இந்நிலையில் 5 ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவராய் உள்ள ஆரியை எப்படியாவது டைட்டில் வின்னர் ஆக்கிவிட வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.

ஃபைனலிஸ்ட்டுகளின் வாக்குகள்
இதற்காக வாக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். இன்று மாலை பிக்பாஸின் கிராண்ட் ஃபினாலே நடைபெற உள்ள நிலையில் ஃபைனலிஸ்ட்டுகள் பெற்ற வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக
அதன்படி ஆரி அர்ஜூனன் மொத்தமாக 23 கோடி வாக்குகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுதான் அதிகளவான வாக்கு பதிவு என்றும் தெரியவந்துள்ளது.

குறைந்த வாக்குகள்
அவருக்கு அடுத்தப்படியாக ரன்னர் அப் நான்கரை கோடி வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது ரன்னர் அப் 4 கோடி வாக்குகள் என்றும், ரம்யா பாண்டியன் 3.7 கோடி வாக்குகள் என்றும் சோம் 3.2 வாக்குகள் என்றும் தெரிய வந்துள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இதன் மூலம் ஆரிதான் டைட்டில் வின்னர் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இதற்கான ஷுட் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் யார் டைட்டில் வின்னர் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும். ஆரிதான் வின்னர் என்பதால் பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











