மானே தேனே பேயே... கிருஷ்ணா- ஆரி இணையும் படம்!

By Shankar

கோலிவுட்டில் இது பேய் பிசாசு சீஸன் போலிருக்கிறது. சுற்றிச் சுற்றி பேய்க் கதைகளின் ஷூட்டிங்குகள்தான்!

இதோ... சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களைத் தந்த கிருஷ்ணா தான் இயக்கும் அடுத்த படத்துக்கு மானே தேனே பேயே என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் - ஸ்ரீதிவ்யா நடிக்கும் பென்சில் படத்தைத் தயாரித்த கல்சன் மூவீஸ்தான் இந்த பேய்ப் படத்தையும் தயாரிக்கிறது.

ஆரி

ஆரி

படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஆரி. 'நெடுஞ்சாலை' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிருஷ்ணா - ஆரி இணையும் இரண்டாவது படம் இது.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

கதாநாயகியாக பிரபல நடிகை மோகனாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மற்றும் சென்ராயன், மதுமிதா ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கிருஷ்ணா

கிருஷ்ணா

சத்யா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கிருஷ்ணா.

படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணாவிடம் கேட்டோம்.

"ஏற்கெனவே நான் இயக்கிய " சில்லுனு ஒரு காதல்" காதல் கலந்த குடும்பப் படம். "நெடுஞ்சாலை" படமோ நெடுஞ்சாலைகளில் நடக்கும் சம்பவங்கள்... மானே தேனே பேயே அந்த இரண்டு படங்களிலிருந்தும் மாறுபட்டதாக இருக்கும். காதலை காமெடி கலந்து சொல்கிறேன்.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

இந்த படத்திற்கு கானாபாலா பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்குகிறது. சென்னை, அமெரிக்கா போன்ற இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப் போகிறோம்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X