சொதப்புறீங்களே ஆரி.. அடுத்த வாரம் சொல்ற வரைக்கும் இருக்கணுமே.. கேட்கும் போதே நெத்தியில அடிக்கணும்!
சென்னை: பிக் பாஸ் வீட்டின் இந்த வார போரிங் போட்டியாளராக ஆரி மற்றும் அனிதா தேர்வாகி ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர்.
ஜெயிலுக்கு செல்வதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் குரூபிசம் பற்றி ஆரி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வாரம் கவனித்து விட்டு பேசுறேன் என டோட்டலா சொதப்பிட்டார்.
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் உடனே அவரிடம் இப்பவே சொல்லுங்க என எகிறிய போதும், ஆரி அமைதியானது ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது.

போரிங் போட்டியாளர்
போன வாரம் கிடைத்த அதே போரிங் போட்டியாளர் பட்டம் இந்த வாரமும் ஆரிக்கு கிடைச்சிடுச்சு. அதனால் ரொம்பவே அப்செட்டான மனுஷன், மனசு விட்டு பேசிடணும்னு நினைச்சாலும், யாரையும் பகைச்சிக்க வேண்டாம் என டிப்ளோமேடிக்கா போனது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

ஒருத்தர டார்கெட் பண்ணா
ஆரம்பத்தில் ஒருத்தர் ஒருத்தர டார்கெட் பண்ணா கடைசி வரைக்கும் வர எல்லாருமே அவங்களையே டார்கெட் பண்ணி போரிங் போட்டியாளரா பச்சை குத்தும் வேலையை இன்னைக்கும் செஞ்சாங்க. அனிதாவுக்கு ஏத்தி விட்டும் அவர் அமைதியா இருந்ததால் சனம் ஷெட்டி அவரையும் போரிங் போட்டியாளர் என கூறியது தான் ஹைலைட்டே.

நெத்தியில அடிக்கலையே
புரமோவை பார்த்து விட்டு பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் ஒருத்தரையும் விடாமல் நெத்தியில அடிச்சது போல, ஆரி பேசுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும், யாரையும் பார்க்காமல் எடுத்து எறிந்து பேச ஆரி ஒன்றும் பாலா இல்லையே? மறைமுகமாக நீங்க பண்றது தப்பு, அதை தொடர்ந்து செய்யாதீங்க என ஆரி சொன்னது யார் காதுக்கும் எட்டியதாக தெரியவில்லை.

ரொம்ப அசிங்கம்
நடிகர் ஆரி தனது ரேஞ்சில் இருந்து இறங்கி சக போட்டியாளர்களுடன் ரொம்பவே மிங்கிள் ஆக விருப்பப் படுகிறார். ஆனால், அவரை எல்லாரும் ஒதுக்கி வைத்து விட்டு, அவரையே பிளேம் பண்ணுவது ரொம்ப தப்பு என்பதையும் இந்த எபிசோடில் தெளிவாக எடுத்து உரைத்தார். மேக்கப் போட்டுகிட்டு, நைட்டி போட்டு ஆடி நல்லா தான் பர்ஃபார்ம் பண்ணி வந்தாலும், அவர் இன்னும் யாருக்கும் வேண்டப்பட்டவனாக ஆகாததால், ஒதுக்கப்படுகிறார்.

எகிறிய பாலா
இந்த வீட்டில இருக்குற எல்லாருக்குள்ளேயும் ஒரு டிப்ளோமஸி இருக்கு, யார் யார் என்ன என்ன பண்றீங்க, யார் யாருக்கு ஃபேவர் பண்றாங்கன்னு எல்லாமே எனக்குத் தெரியும் என ஆரி சொன்னதும், எகிறிய பாலா, நீங்களும் தான் வெளிப்படையா சொல்லாமல் உங்களை நல்லவரா காட்டிக்கிறீங்க என்ற போதும் ஆரி ஃபயர் ஆன் ஆகவில்லை.

டைம் கிடைக்குமா?
அடுத்த வாரம் வெயிட் பண்ணி கணிச்சு சொல்றேன்னு என்னதான் ஆரி சொன்னாலும், இந்த வாரம் எவிக்ஷன் இருக்கே, யார் வெளியே போகப் போறாங்கன்னு இதுவரைக்கும் ஆஜீத் ஜோசியரும் சொல்லாத நிலையில், ஒரு வேளை ஆரி வெளியேறி விட்டால் அவர் சொல்ல வந்ததை சொல்லவே முடியாமல் போயிடுமே என்றும் ரசிகர்கள் எண்ணி பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











