Just In
- 2 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 3 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 5 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 6 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அழகா திட்டம் போட்டு ஆடிய ஆரி.. குழம்பிப் போன ரியோ, சோம்.. கேம்ன்னா இப்படி இருக்கணும்!
சென்னை: நேர்மையின் சின்னமாகவே தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆடி வருகிறார் நடிகர் ஆரி அர்ஜுனா.

கோழிப்பண்ணை டாஸ்க்கில் என்ன ரூல் என்றே புரியாமல் ஹவுஸ்மேட்கள் விளையாடிய நிலையில், ஆரியின் ஆட்டம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
ரியோவிடமும் சோமிடமும் தனித்தனியே அவர் போட்ட டீலிங், அவரது புத்திக் கூர்மையை அழகாக வெளிப்படுத்தியது.
பிசிக்கல் வயலன்ஸ் ஆகிடும்.. எச்சரித்த ஆரி.. கேட்காமல் கத்திய அர்ச்சனா.. கலவரமான பிக் பாஸ் வீடு!

நேர்மையின் சின்னம்
சனம் ஷெட்டி வெளியேறும் போதும், ஜித்தன் ரமேஷ் வெளியேறும் போதும் ஆரியின் நேர்மையை பாராட்டினர். நேர்மையின் சின்னம் என சனம் ஷெட்டி ஆரிக்கு தனியாக ஒரு பட்டமே கொடுத்தார். ஆனால், அர்ச்சனாவால் அதை இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. எந்த விளையாட்டாக இருந்தாலும், கேமை கேமாக விளையாட வேண்டும் என்கிற குறிக்கோளில் ஆரி நழுவவே இல்லை என்பதை இந்த கோழிப்பண்ணை டாஸ்க்கும் வெளிச்சப்படுத்தி உள்ளது.

சூப்பர் பேரம்
நரியிடம் கோழி தனது தங்க முட்டையை காப்பாற்ற வேண்டும் என்றால், நரியை விட தந்திரமாக திட்டம் போட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ரியோ மற்றும் சோமசேகரிடம் தனித் தனியாக ஆரி பேரம் பேசியதும் அதில் அவர் எடுத்து வைத்த அந்த பாயின்ட்டும் ரசிகர்களை அட போட வைத்தது.

முட்டையை எடுப்பதை தடுக்கவில்லை
என் முட்டையை எடுத்துக் கொள்ளாதே நரி என ரியோவிடமும் சோமிடமும் ஆரி பேரம் பேசவில்லை. அதற்கு பதிலாக ரொம்பவே புத்திக் கூர்மையுடன், கடைசியாக வந்து என் முட்டையை எடுக்க முயற்சி செய் என ரியோவிடமும் சோமிடமும் செம ஸ்மார்ட்டாக ஆரி பேரம் பேசியது ரசிகர்களை வியக்க வைத்தது.

அம்பலமான ரகசியம்
ஆரி தந்திரமாக திட்டம் போட்டு இப்படியொரு பேரத்தை இருவரிடமும் போட்ட நிலையில், சோம் மற்றும் ரியோ, ஆரி என்ன பேரம் பேசினார் என்பது பற்றி பேச ஆரம்பித்தனர். அப்போது தான், ஆரியின் நரித்தந்திரம் அவர்களுக்கு புரிய வந்தது. அவர் கிட்ட போட்ட ஒப்பந்தப்படி பார்த்தா யார் கடைசியாக போவது, நீயா அல்ல நானா என்கிற குழப்பம் அவர்களுக்குள் வந்தது.

விலகிய ரியோ
ஆரியின் ஐடியாவை இருவரும் தெரிந்து கொண்ட நிலையில், நான் இந்த பேரத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என ரியோ ராஜ் விலகிக் கொண்டார். ஆனாலும், ஆரியின் அந்த ஆட்ட யுக்தியை அவரது ஆர்மியினர் சமூக வலைதளங்களில் ஸ்க்ரீன் ஷாட்களாகவும், வீடியோ கட்களாகவும் எடுத்துப் போட்டு கொண்டாடி வருகின்றனர்.