’தறுதலை’ பிரச்சனை.. சம்யுக்தா காலில் விழ தயார்.. பாலாவுக்கு நான் தான் வில்லன்.. வேற லெவல் ஆரி!
சென்னை: 'தறுதலை' வார்த்தையை தான் தவறாக பயன்படுத்தினேன் என கமல் சார் சொன்னால், சம்யுக்தாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கத் தயார் என ஆரி சொல்லியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாலாஜி முருகதாஸ் ஆரம்பித்த அந்த வார்த்தை 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் புதிய டேக்காகவே மாறி விட்டது.
'தறுதலை' வார்த்தையை யார் எப்படி சொன்னாலும் அது தவறான வார்த்தை தான் என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

கேமராவுக்கு முன்னாடி நின்று
ஓஹோ சனம் பாட்டுப் போட்டதுக்கு, கேமராவுக்கு முன்னாடி நின்று சனம் ஷெட்டி நன்றி சொன்னது போல, பிக் பாஸ் வீட்டின் கேமராவுக்கு முன்னாடி நின்று கொண்டு திடீரென ஆரி பேச ஆரம்பித்தார். என்னடா பொதுவா நடிகைகள் தானே இதை பண்ணுவாங்க, இவர் ஏன் இப்படி பேசுறார் என ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கினர்.

தறுதலை பிரச்சனை
பிக் பாஸ் கேமராவுக்கு முன்பாக தனது கருத்தை மீண்டும் ஒரு முறை ஆரி பதிவு செய்தார். ‘தறுதலை' என கோர்ட் ரூமில் தான் பேசியது குறித்தும், அந்த வார்த்தையை தான் சம்யுக்தா நினைப்பதை போலவே தவறாகத் தான் பேசினேன் என வார இறுதியில் முடிவானால் மன்னிப்பு கேட்கத் தயார் என்பதை பதிவு செய்தார்.

சம்யுக்தா காலில் விழுந்து
'தறுதலை' வார்த்தையை தான் தவறாக பயன்படுத்தியது உறுதியானால் சம்யுக்தாவின் காலில் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்கள் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்க தயார் என ஆரி பேசிய இடத்திலேயே ஸ்கோர் செய்து விட்டார். பார்க்கலாம், நாளைக்கு கமல் சார் பிறந்தநாள் அதுவுமா? பஞ்சாயத்து பண்ணுவாரா? இல்லை சமாதானம் செய்து வைப்பாரா? என்று!

பாலாவுக்கு வில்லன்
சம்யுக்தா பிரச்சனையை மட்டுமின்றி பாலா தொடர்பான பிரச்சனை குறித்தும் கேமரா முன்னாடி ஆரி பேசினார். பாலா தன்னை ஹீரோவாக நினைத்துக் கொண்டிருந்தால், அவருக்கு இந்த வீட்டில் நான் தான் வில்லன். நான் வில்லனாகவே இருக்க ஆசைப்படுகிறேன். அவரை நல்வழிப் படுத்த என்று பேசி பாலாவின் சப்போர்ட்களிடம் இருந்து பாராட்டுக்களை அள்ளி வருகிறார் ஆரி.


Click it and Unblock the Notifications











