பிக்பாஸ் ஆரி நடிக்கும் பகவான்.. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் !
சென்னை : நடிகரும் சமூக சேவகருமான ஆரி இப்பொழுது பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு சக போட்டியாளர்களை சுளுக்கு எடுத்து வருகிறார்.
ஆடும் கூத்து திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான ஆரி நெடுஞ்சாலை திரைப்படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே நடித்துள்ள பகவான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்பொழுது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தேசிய விருது
எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் சினிமாவின் மீது கொண்ட காதல் காரணமாக இன்றுவரை தனக்கான ஒரு இடத்தை தேடிக் கொண்டிருக்கும் நடிகர் ஆரி தமிழ் சினிமாவிற்கு ஆடும் கூத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
"ஆடும் கூத்து" சிறந்த மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது வென்றபோதிலும் ஆரிக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

துணிச்சலான கதாபாத்திரத்தில்
இந்நிலையில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணாவின் 2வது திரைப்படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்க இந்த முறை வித்தியாசமான அதே போல துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி ஆரிக்கு "நெடுஞ்சாலை"திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான பல்வேறு விருதுகளையும் வென்றார்.

கவனிக்கவும் படவில்லை
அதன்பின் நயன்தாராவின் நடிப்பில் வெளியான சூப்பர் திரில்லர் மாயா மிகப்பெரிய வெற்றி பெற்று நயன்தாராவிற்கு சோலோ ஹீரோயின் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் ஆரி நடித்திருந்தாலும் இதிலும் எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை கவனிக்கவும் படவில்லை.

வெற்றியாளராக வருவார்
மேலும் தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்து வரும் ஆரி இப்பொழுது பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்து கொண்டு தனித்து நின்று விளையாடி எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்டுள்ள நிலையில் இவர்தான் வெற்றியாளராக வருவார் என பலரும் கணித்து வருகின்றனர்.

முதல் இலுமினாட்டி திரைப்படம்
இந்நிலையில் ஆரி நடித்துள்ள "பகவான்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே வெளியிடப்பட்டது. போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் என இரண்டு விதங்களாக வெளியிடப்பட்ட பகவான் ஃபர்ஸ்ட் லுக்கில் ஆரி இதுவரை கண்டிராத அளவிற்கு வித்தியாசமான தோற்றத்தில் நீளமான முடியில் பாக்கவே பயமுறுத்தும் லுக்கில் இருக்க இருந்த திரைப்படம் தமிழில் வெளியாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் என சொல்லப்படுகிறது.

பிக் பாஸ்
நடிகர் ஆரி இப்பொழுது பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடிக் கொண்டு வரும் நிலையில் பகவான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருப்பதால், ரசிகர்களின் பேராதரவோடு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











