எல்லோருக்கும் முத்தம் கொடுத்த ஆரியின் மகள்.. பாரபட்சமின்றி பிக் பாஸ் வீட்டில் பொழிந்த பாச மழை!

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரியின் மகள் மெயின் டோர் வழியாக தனியாக நடந்து வந்ததை பார்த்து ஹவுஸ்மேட்கள் அள்ளி தூக்கிக் கொண்டனர்.

Recommended Video

சென்னை: மகளாக இருந்தாலும் ரூல்ஸ்தான்.. கண்ணீர் வழிய.. வழிய.. ஆரியின் அப்பா பாசம்..!

எல்லாரையும் ரிலீஸ் பண்ண பிக் பாஸ், ஆரியை மட்டும் ஃப்ரீஸ் செய்தார்.

பிக் பாஸ் ரூல்ஸை மதிக்க வேண்டும் என்கிற விளையாட்டை தொடர நினைத்த ஆரி செல்ல மகள் தனியாக வந்தும் அவரை தூக்காமல் கண்ணீர் சிந்திக் கொண்டு சிலையாக இருந்தது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.

என்னை அறிந்தால் பாட்டு

என்னை அறிந்தால் பாட்டு

எல்லா குடும்பங்களும் வந்து சென்ற நிலையில், இன்னமும் தன் குடும்பம் வரவில்லையே என ஆரி நினைத்திருக்கும் நேரத்தில், தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற உனக்கென்ன வேணும் சொல்லு பாட்டோடு ஆரியின் செல்ல மகள் ரியா அழகாக நடைபோட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய, ரியோ அவரை தூக்கிக் கொண்டு, ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுடன் ஆரியிடம் வந்தார்.

கண்ணீர் கசிந்தபடி

கண்ணீர் கசிந்தபடி

இதுவரை ஃப்ரீஸ் டாஸ்க் வந்தாலே அதை மதிக்காமல், தங்கள் சொந்தங்கள் வந்தவுடன் அந்த நபர் ரிலீசாகி போய் வரவேற்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், தனது செல்ல மகள் ரியா தனியாக வந்த போதும், ஆரி அசையாமல் அப்படியே இருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

ஸோ க்யூட் ரியா

ஸோ க்யூட் ரியா

ஆரியை பிக் பாஸ் ரிலீஸ் செய்ததும் செல்ல மகளுக்கு அன்பு முத்தங்களை பரிசளித்த ஆரி, இவங்க பேரு ரியோ, சோம், ரம்யா, பாலா மாமா, ஆஜீத் மாமா, ஷிவானி, கேபி என சொல்ல ரியா குட்டியும் அழகாக போட்டியாளர்களின் பெயர்களை க்யூட்டாக சொன்னார்.

பிகு பிகு பிக்பாஸ்

பிகு பிகு பிக்பாஸ்

மேலும், பிக் பாஸை பிகு பிகு பிக் பாஸ் என்று தான் ரியா சொல்வார் என கன்ஃபெஷன் ரூமில் இருந்து வந்த அவரது மனைவி சொன்னதும், ரியா குட்டியும் பிகு பிகு பிக்பாஸ் என்று சொல்லி கூப்பிட பிக் பாஸிடமும் கொஞ்ச நேரம் கொஞ்சி உரையாடினார்.

பாரபட்சமின்றி முத்தம்

பாரபட்சமின்றி முத்தம்

பாலாவின் சகோதரர் ஆரி கட்டியணைக்க சென்ற போது கூட அதை தட்டிக் கழித்து சென்றது போல இல்லாமல், ஆரி தனது மகளை அத்தனை போட்டியாளர்களிடமும் கொடுத்து, அவர்கள் அனைவருக்கும் முத்தம் கொடுக்க வைத்து டாட்டா சொல்லி, ஹேப்பி நியூ இயர் சொல்ல சொல்லி வழி அனுப்பி வைத்தது வேற லெவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X