நீ அன்ஃபிட்.. பிக்பாஸுக்கு தகுதியே இல்லாத ஆளு.. கேபியை வெறுப்பேற்றிய ஆரி.. குளிர்காய்ந்த அர்ச்சனா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரோபோ டாஸ்க்கில் நீ அன்ஃபிட் என கேபியை வெறுப்பேற்றினார் ஆரி.

பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக புதிய மனிதா என்ற தலைப்பில் ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் பகுதியில் அர்ச்சனா தலைமையில் 6 ஹவுஸ்மேட்ஸ் ரோபோக்களாக இருந்தனர். எஞ்சிய 6 பேர் பாலாஜி தலைமையில் மனிதர்களாக இருந்தனர்.

செயலிழக்க செய்யணும்

செயலிழக்க செய்யணும்

இதில் மனிதர்கள் ரோபோக்களுக்கு கோபம், மகிழ்ச்சி, துன்பம் போன்ற ஏதாவது இரண்டு உணர்ச்சிகளை கொடுக்க வேண்டும். உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ரோபோக்களின் இதயங்கள் வெளியில் எடுக்கப்பட்டு அவை செயலிழந்ததாக அறிவிக்கப்படும்.

கேபியிடம் பேசிய ஆரி

கேபியிடம் பேசிய ஆரி

இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது. இதில் மனிதர்கள் ரோபோக்களின் உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வர முயற்சி செய்தனர். அதன் ஒரு பகுதியாக கேபியை அழைத்து தனியாக பேசிக் கொண்டிருந்தார் ஆரி.

உங்களுக்கு தகுதியில்லை

உங்களுக்கு தகுதியில்லை

அப்போது பேசிய ஆரி, கேபியிடம் நீங்கள் ஸ்ட்ராங்கான கன்டெஸ்டென்ட் இல்லை. நீங்கள் வீக்கான கன்டெஸ்டென்ட். இந்த வீட்டில் இருக்க உங்களுக்கு தகுதியில்லை என்று வெறுப்பேற்றினார்.

தப்பா விளையாடுனீங்க

தப்பா விளையாடுனீங்க

மேலும் நீங்கள் டாஸ்க்கை தப்பா விளையாடுனீங்க. அதனாலதான் நாமினேஷன் புராசஸை பிக்பாஸ் திரும்ப பண்ண வச்சுட்டாரு என்றார். அதற்கு நான் தகுதியான போட்டியாளர் என்ற கேபி, யார் எனக்கு வந்திருந்தாலும் அவர்களை காப்பாற்றதான் முயற்சி செய்திருப்பேன் என்றார்.

பிக்பாஸுக்கு தகுதியில்லை

பிக்பாஸுக்கு தகுதியில்லை

அதற்கு பதில் சொன்ன ஆரி, நீங்கதான விளையாடணும். உங்களுக்கு எக்ஸாம் எழுத ஒரு பேப்பர் கொடுத்தா, நான் அவரு வந்தாதான் எழுதுவேன் இவரு வந்தாதான் எழுதுவேன் என்றால் என்ன அர்த்தம், பிக்பாஸ்க்கு தகுதியில்லை என்றுதானே அர்த்தம் என்றார்.

பேக்கேஜ் வச்சுருக்கார்

பேக்கேஜ் வச்சுருக்கார்

அதன்பிறகு ஒரு வழியாய் டாஸ்க்கை முடித்த கேபியை அர்ச்சனாவும் ஜித்தன் ரமேஷும் தனியாக அழைத்து சென்று ஆரி என்ன பேசினார் என்ற கேட்டப்படியே இருந்தனர். அப்போது, நான் அன்ஃபிட், எனக்கு தகுதியில்லை என்றே கூறிக்கொண்டே இருந்தார் என்றார் கேபி. அதனைக் கேட்ட அர்ச்சனா எல்லாத்தையும் மனசுல வச்சுட்டு இருக்கார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X