கடைசி வாரத்திலும் முதல் ஆளாய் சேவ்வான ஆரி.. பிக்பாஸ் வீட்டின் தரையை ஆக்ரோஷமாக தட்டி ஆறுதல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்திலும் ஆரி அர்ஜூனன் முதல் ஆளாய் காப்பாற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் ஃபினாலேவை எதிர்கொள்கிறது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் கடைசி நாமினேஷன் புரசாஸ் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது.
ஓபன் நாமினேஷனாக போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்தனர்.

குண்டை தூக்கி போட்டார்
அனைவரையும் ஆசைத்தீர நாமினேட் செய்ய வைத்த பிக்பாஸ் இறுதியில் இது கடைசி வாரம் என்பதால் அனைவரும் நாமினேஷனில் இடம் பெறுகிறீர்கள் என்று கூறி குண்டை தூக்கி போட்டார். இதனால் 7 போட்டியாளர்களும் நாமினேஷனில் இடம் பிடித்தனர்.

சேவ்வான போட்டியாளர்
இந்நிலையில் நேற்றைய எபிசோடின் இறுதியில் இந்த வாரம் சேவ் ஆன போட்டியாளர் யார் என்பதை கமல் அறிவித்தார். அப்போது வழக்கம் போல் ஆரியின் பெயரையே முதலாவதாக கூறிய கமல் அவரை சேவ்டு என்றார்.

எல்லா வாரமும் நாமினேஷன்
ஆரி கேப்டனாக இருந்ததை தவிர்த்து மற்ற அனைத்து வாரங்களிலுமே சக ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த வாரம் அனைத்து ஹவுஸ்மேட்ஸும் நாமினேஷனுக்கு வந்த நிலையில் யார் முதலில் சேவ் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டஜன் டஜனாக குற்றச்சாட்டு
இந்த வாரமும் ஆரி முதல் நபராய் சேவ் செய்யப்பட்டார். குறைகளை சொல்லும் டாஸ்க்கின் போது அனைவருமே ஆரியை ரவுண்டு கட்டினர். குறிப்பாக ரம்யா டஜன் டஜனாக ஆரி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

மக்களுக்கு பிடித்திருக்கும்
அந்த டாஸ்க்கில் கடைசி இடத்துக்கு ஆரியை நாமினேட் செய்து அவரை கெட்டவன் என்றனர். தனக்கு சக ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த 7வது இடத்தை பெற்றுக் கொண்ட ஆரி, இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மக்களுக்கு என்னை பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

தரையை தட்டி
அதன்படியே மக்கள் அவருக்கு அதிக வாக்குகளை அள்ளிக் கொடுத்து முதல் ஆளாய் காப்பாற்றினர். கமல் தான் காப்பாற்றப்பட்டோம் என கூறியதை கேட்ட ஆரி, பிக்பாஸ் வீட்டின் தரையில் கையை வைத்து ஆக்ரோஷமாக தட்டினார்.

குழந்தை மேல் ஆணையாய்
தொடர்ந்து கார்டன் ஏரியாவில் பாலாஜியிடம் பேசிய ஆரி, என் குழந்தை மேல் ஆணையாய் இந்த வீட்டில் எந்த இடத்திலும் நான் காழ்ப்புணர்ச்சியுடன் இருந்ததில்லை.
எப்போதும் யாரும் ஜெயிக்கக்கூடாது என்று நினைத்ததில்லை என்று கண்கள் கலங்க உருக்கமாக பேசினார்.


Click it and Unblock the Notifications











