அச்சச்சோ.. நேருக்கு நேராய் ஆஜித்திடம் அதை சொன்ன ஆரி.. சேர்ந்து கட்டம் கட்டுவாங்களே.. அன்சீன் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 வரை ஒளிபரப்பப்படுகிறது.
ஒரு நாள் முழுக்க நடக்கும் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே ஒரு மணி நேரத்தில் காட்டப்படுகிறது.

அன்சீன் புரமோ
பல காட்சிகள் அன்சீன் என விஜய் மியூஸிக் தொலைக்காட்சியில் நாள்தோறும் 10.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதற்கான புரமோக்கள் விஜய் மியூஸிக் சேனலின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி வருகிறது.

நியூ இயர் டாஸ்க்
இந்நிலையில் இன்றைய அன்சீன் புரமோவில் புத்தாண்டை முன்னிட்டு ஹவுஸ்மேட்டுகளுக்கு ஸ்பெஷல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது 2021ஆம் ஆண்டுக்கு ஹவுஸ்மேட்ஸ் கொண்டு செல்ல வேண்டியது வேண்டாதது என்ன என்பது என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.

ரம்யாவுக்கு கேபியின் பெயர்
அதன்படி கார்டன் ஏரியாவில் உள்ள ஒரு கண்ணாடி பவுலில் ஹவுஸ்மேட்ஸின் பெயர்கள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு போடப்பட்டுள்ளது. அதில் ஒன்றை எடுக்கும் ரம்யா தனக்கு கேபி பெயர் வந்துள்ளதை கூறி, அவருடன் இருப்பவர்கள் ரொம்ப லக்கி, அவங்களோட இருப்பவங்கள கேரிங்கா பார்த்துப்பாங்கன்னு இந்த 85 நாட்களில் எனக்கு தெரிந்துள்ளது என்கிறார்.

கோபப்படாதீங்க ஆரி
அடுத்து வரும் கேபிக்கு ஆரியின் பெயர் வருகிறது. தொடர்ந்து பேசும் கேபி, ஆரி புரோ எல்லாவற்றுக்கும் கோபப்படுவதை அடுத்த வருஷத்துக்கு எடுத்துட்டு போகக்கூடாது என்கிறார். அதனை சிரித்த முகத்துடன் வரவேற்கிறார் ஆரி.

ஆரிக்கு ஆஜித் பெயர்
அடுத்து வரும் ஆரிக்கு, ஆஜித்தின் பெயர் வந்துள்ளது. ஆரி அவருடைய பெயரை சொன்னதுமே சக ஹவுஸ்மேட்ஸ் ஆரவாரம் செய்கின்றனர். தொடர்ந்து பேசும் ஆரி, நால்றை கோடி மக்களுக்கு இந்த மாதிரி ஒரு பிளாட் ஃபார்ம்ல கிடைக்குமான்னா கிடைக்காது.

ஆனா பத்தலை..
இந்த 85 நாள் உன்னோட உழைப்ப கடுமையா கொடுத்திருக்க.. ஆனா பத்தல என்று பட்டென மூஞ்சுக்கு நேராய் சொல்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், இப்படி நேருக்கு நேராய் சொல்கிறீர்களே ஆரி, உங்களை கட்டம் கட்டுவார்களே என பதைபதைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











