twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல!

    |

    சென்னை: பாலாஜியை மட்டும் ஃபோகஸ் பண்ணாதீங்க புரோ என ஆரிக்கு ரியோ அட்வைஸ் சொன்னது வேலை செய்ய ஆரம்பித்துள்ளது.

    ஜித்தன் ரமேஷிடம் தனியாக பேசிய ஆரி, உங்களுக்கு ஏன் ரம்யா பாண்டியன் போன் பண்ணி பேசணும் என தனது கவனத்தை ரம்யாவின் மீது திருப்பி உள்ளார்.

    ஆஜீத்தை காப்பாற்ற ரம்யா பாண்டியன் பிளே பண்றாங்களோ என்கிற கேள்வியும் ஆரி மனதில் எழுந்துள்ளது.

    என்ன அழகுடா சாமி.. மாநாடு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு எடுத்த செம க்யூட் செல்பி.. வைரலாகுது!என்ன அழகுடா சாமி.. மாநாடு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு எடுத்த செம க்யூட் செல்பி.. வைரலாகுது!

    மூன்றாவது முறையாக ஜெயில்

    மூன்றாவது முறையாக ஜெயில்

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக முறை ஜெயிலுக்கு போனவர் என்கிற பட்டத்தையே ஆரிக்கு கொடுக்கலாம். பாலா குரூப் மற்றும் அர்ச்சனா குரூப் என இரண்டுக்கும் நடுவே தனித்துவமாக விளையாடி வருவதால் தான் இந்த பிரச்சனை என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாதாடி வருகின்றனர்.

    ரியோ கொடுத்த அட்வைஸ்

    ரியோ கொடுத்த அட்வைஸ்

    எல்லாருக்கும் அட்வைஸ் கொடுக்கும் ஆரிக்கு, ரியோ ராஜ் கண்ணாடி ரூமில் ஒரு சூப்பரான அட்வைஸ் கொடுத்திருந்தார். வெறும் பாலாஜியை மட்டுமே ஃபோகஸ் பண்ணாதீங்க, அவரை விட பெரிய விஷயங்கள் சத்தமே இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கு என்பதை புரிய வைத்து விட்டார். ரியோ, ஆரிக்கு சொல்ல வந்தது என்ன என்பதை ஆரியும் நன்றாகவே உணர்ந்து கொண்டார்.

    சைலன்ட் கில்லர்

    சைலன்ட் கில்லர்

    சுரேஷ் சக்கரவர்த்தி சொன்னது போல பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் சைலன்ட் கில்லராக இருப்பது ரம்யா பாண்டியன். சிரித்துக் கொண்டே, ஏகப்பட்ட காரியங்களை சத்தமில்லாமல் செய்து டைட்டிலை தட்டித் தூக்க பிளான் போட்டு ரம்யா பாண்டியன் விளையாடி வருவதை நன்கு உணர்ந்து கொண்ட ரியோ, ஆரிக்கும் அதை புரிய வைத்து விட்டார்.

    ரமேஷுக்கு ஏன்

    ரமேஷுக்கு ஏன்

    ஜித்தன் ரமேஷை உட்கார வைத்து உங்களுக்கு ஏன் ரம்யா பாண்டியன் கால் பண்ணி பேசணும், உங்ககிட்ட அவங்களுக்கு கேட்க என்ன இருக்கு என நேரடியாகவே ரமேஷிடம் பேசி விஷயத்தை புரிந்து கொள்ள முயற்சித்தார் ஆரி. ஆஜீத்தை காப்பாற்றத்தான் ரம்யா அப்படி விளையாடுறாங்களா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

    Recommended Video

    பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil
    பாலாவை விட்டா ஆஜீத்

    பாலாவை விட்டா ஆஜீத்

    ஆரிக்கு பாலாவை விட்டா ஆஜீத், இந்த இரண்டு பேரை தவிர வேறு யாரும் தெரியாது போலவே தோன்றுகிறது. ரம்யா பாண்டியனின் கேமே வேற பாஸ். அவ்வளவு பேர் அடிச்சிக்கிட்டு இருக்கும் போதும், சைலன்ட்டா இருக்கும் ரம்யாவை பற்றி இன்னமும் நல்லா புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பதே பிக் பாஸ் ரசிகர்களின் கோரிக்கை.

    English summary
    Aari talks to Jithan Ramesh about Ramya Pandian’s phone call after out from Bigg Boss glass room.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X