அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் தனக்கு நடந்த ரீயூனியன் குறித்து பேசிய ஆரி கமலிடம் நெகிழ்ந்து போனார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ் வந்து சென்ற நிலையில் நேற்றைய எபிசோடில் அதுகுறித்து பேசினார் கமல்.

அப்போது உள்ள வந்தவர்களுடன் யாருக்கெல்லாம் ரீயூனியன் ஏற்பட்டது என்று கேட்ட கமல், முதல் ஆளாக ஆரியிடம் அதுகுறித்து கேட்டார்.

அவங்க அப்பாவுக்கு பிடிக்குமாம்

அவங்க அப்பாவுக்கு பிடிக்குமாம்

அதற்கு பதில் கூறிய ஆரி, "சனம், அனிதா பேசுனாங்க. அனிதா கோபப்பட்டத தவறுன்னு உணர்ந்துட்டாங்க. அவங்க அப்பாவுக்கு என்னை ரொம் பிடிக்குமாம் அதை சொன்னாங்க. அனிதா ஏன் ஆரிக்கிட்ட அப்படி பேசுச்சு? வந்ததும் கேட்டுக்கலாம்னு இருந்தாங்களாம், அதை சொல்லி ரொம்ப அழுதாங்க, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

நானும் மன்னிப்பு கேட்டேன்

நானும் மன்னிப்பு கேட்டேன்

நான் அதை பண்ணியிருக்கக்கூடாதுன்னு சொல்லுச்சு. அவ்ளோதான்மா இனி ஒன்னும் பிரச்சனையில்லை, நான் ஏதாவது தவறா பேசியிருந்தா நானும் மன்னிப்பு கேட்டுக்குறேனு நானும் கேட்டேன். இனிமே சந்தோஷமா இருக்கலாம்னு சொன்னேன்.

விளையாடும்போது கத்தி..

விளையாடும்போது கத்தி..

அனிதாவ எப்போதும் நான் தங்கச்சியாதான் பார்த்திருக்கேன்.
விளையாடும்போது கத்தி எடுத்து சுழட்டும்மா. வெளியே வந்ததும் அண்ணன் தங்கச்சியா இருப்போம்னு தான் சொல்லியிருக்கேன் என்றார்.

ஒரு தயக்கம் இருக்கும்..

ஒரு தயக்கம் இருக்கும்..

தொடர்ந்து நிஷா குறித்து பேசிய ஆரி, நிஷாக்கிட்ட உட்காந்து பேசினது மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ்டா இருந்துச்சு. வீட்ல நிறைய பேருக்கிட்ட கருத்து மோதல் இருந்தாலும் திரும்ப போய் பேசுனா சரியா பேசுவாங்களோன்னு ஒரு தயக்கம் இருக்கும்.

ஏதாவது பேசியிருப்பேன்..

ஏதாவது பேசியிருப்பேன்..

நிஷா ஒரு ஆள் கிட்ட மட்டும்தான் திட்டிட்டு போய் திரும்ப உட்காந்து பேசுனாலும் மனசுல எதையுமே வச்சுக்காம அப்படிய பேசும். இங்க வந்து அவங்க பேசுன விஷயம் எனக்கு கண்ணு கலங்கிடுச்சு. சகோதரா நீங்க தனியா இருந்தீங்க. நான் இருந்தா ஏதாவது பேசியிருப்பேன். பேசுறதுக்கு ஒரு ஆள் இல்லன்னு தெரியுது.

ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு..

ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு..

அதனாலதான் எல்லாரும் தனியா போன பிறகு நான் வந்து உட்காந்தேன்னு சொல்லுச்சு. அது பெரிய ஆறுதலாவும் நெகிழ்ச்சியாவும் இருந்துச்சு. உண்மையான சகோதரியா ஒரு மாரல் சப்போர்ட்டா இருந்துச்சு. நான் இருக்கேன்டா அப்படின்னு சாயிறதுக்கு ஒரு தோள் இருந்த அந்த தருணம் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு என்று நெகிழ்ச்சியாக கூறினார் ஆரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X