எல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து.. அடுத்த புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் வில்லன் யார் ஹீரோ யார் என சொடக்கு போட்டு பேசினார் கமல்.
பிக்பாஸ் வீட்டில் பாலாஜி ஆரி மற்றும் ஹவுஸ்மேட்டுகளிடம் பேசியதை இமிடேட் செய்யும் வகையில் பேசினார் கமல்.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்று பிக்பாஸ் வீட்டில் தரமான சம்பவம் இருக்கு, கமல் பாலாஜியை வச்சு செய்யப்போகிறார் என மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

தூக்கு உள்ள வச்சுட்டேன்

தூக்கு உள்ள வச்சுட்டேன்

இதில் கமல் அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்டுகளிடம் பேசுகிறார். அப்போது பேசும் ஆரி, பாலாஜிதான் சார் முதலில் ஆரம்பித்தார். ரெண்டு பேரையும் ஸ்கெட்ச் போட்டேன் தூக்கி உள்ள வச்சுட்டேன்னு கிளம்பி போனார் என்று கூறுகிறார் ஆரி.

கையை கட்டிட்டு பேசுங்க

கையை கட்டிட்டு பேசுங்க

ஆரி சொல்ல சொல்ல சிரித்துக் கொண்டிருந்த பாலாஜி, பின்னர் ஆரி நல்லா கதை எழுதுவார் சார் என்கிறார். அதனை கண்டுகொள்ளாத ஆரி, பாலாஜியிடம் பேசும்போது கையை கட்டிட்டு பேசுங்க சார், கையை நீட்டிட்டிங்கன்னா பிரச்சனையாயிடும் சார் என்று கமலிடம் கூறுகிறார்.

பிராக்டீஸ் வாட் யூ பிரீச்..

பிராக்டீஸ் வாட் யூ பிரீச்..

சண்டை நடக்கும்போது வந்து குற்றம்சொல்லி அட்வைஸ் பண்ணிட்டு போயிடுறாரு என்று பாலாஜி பதில் சொல்ல குறுக்கிடும் கமல், பிராக்டீஸ் வாட் யூ பிரீச்.. என்று கூறுகிறார். அதற்கு பாலாஜி பதில் சொல்ல முயற்சிக்கிறார்.

சார் வச்சுருக்காரு சாட்டை

சார் வச்சுருக்காரு சாட்டை

ஆனால் கமலே அதை கேட்க விருப்பம் காட்டவில்லை. அதுக்கு நான் வர்றேன் அப்புறம் வர்றேன்.. என்று விவகாரமாய் சொல்கிறார். அதனைக்கேட்டு சக ஹவுஸ்மேட்ஸ் கைகளை தட்டி சிரிக்க, அதற்கு பதில் சொல்லும் ஆரி, இருங்க வெய்ட் பண்ணுங்க.. எல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை என்கிறார்.

பயம் தெரியவில்லை

பயம் தெரியவில்லை

இந்த புரமோவில் கமலிடம் ஆரி பேசும்போது அவரது முகத்தில் கொஞ்சம் கூட பயம் தெரியவில்லை. தன்னுடைய ட்ரேட் மார்க் சிரிப்புடன் எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், ஆரிக்கு ஆதரவாய் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X