இரவு முழுக்க கண் விழித்து காத்திருந்த ஆரி டீம்.. குறட்டை விட்டுத் தூங்கி ஸ்கோர் பண்ண சோம் டீம்!

சென்னை: எந்த நேரத்தில் எப்படி பந்து வரும் என்று தெரியாத நிலையில், இரவு முழுக்க பால் கேட்ச் டாஸ்க் தொடர்ந்தது.

இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்த ஆரி டீமுக்கு பெரிய பல்பு தான் கிடைத்தது.

நல்லா குறட்டை விட்டுத் தூங்கி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த சோம் டீம், சத்தம் கேட்ட அடுத்த செகண்ட் எழுந்து வந்து ஈஸியா ஸ்கோர் செய்து சென்றனர்.

இரவு நேரத்திலும்

இரவு நேரத்திலும்

பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட நேரம் நல்லா படுத்துத் தூங்கி, மிக்சர் தின்னும் போட்டியாளர்களை இந்த பகல் இரவு கேம் தான் கொஞ்சம் வாட்டி வதைக்கிறது. பால் கேட்ச் டாஸ்க் மொக்கையாக இருந்தாலும், அதை சுவாரஸ்யப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அதை பகலிரவு ஆட்டமாக மாற்றிவிட்டனர்.

கொக்கா? மக்கா?

கொக்கா? மக்கா?

வீட்டில் இரவு நேரத்தில் எந்த வேலையும் இல்லாத நிலையில், பந்து வரும் இடத்தின் அருகே பட்டறையை போட்டு விட்டனர் பாலா, ஆரி, ஷிவானி, ஆஜீத் மற்றும் அனிதா அடங்கிய ஐவர் குழு. இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்து முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்றின் முதல் பகுதியில் தோற்றதை ஈடு செய்ய கொக்குகளாக மாறினர். ஆனால், அவர்கள் கொக்கா? இல்லை மக்கா? என்பது தான் தெரியவில்லை.

பாட்டு கச்சேரி

பாட்டு கச்சேரி

பாலாவை தட்டிக் கொடுக்கும் விதமாக நிறைய பாடுங்கள் என கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸ் சொன்னதும் சொன்னார். இரவு முழுக்க கண் விழித்து இருக்க வேண்டும் என்பதற்காக பாலா தொடர்ந்து "காத்தடிக்குது காத்தடிக்குது", "டங்கா மாரி ஊதாறி" என பாடி பாட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டு இருந்தார்.

அனிதா அட்ராசிட்டி

அனிதா அட்ராசிட்டி

பாலாஜி, ஷிவானி, ஆஜீத், அனிதா என எல்லாருமே அரை லூசுகளாக மாறி விட்டார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. அனிதா ஸ்டூல் எல்லாம் போட்டு அந்த பைப் வழியாக பிக் பாஸ் டீம் எழுந்திரிங்க, எங்களுக்கு பந்து போடுங்க என ஓவர் அட்ராசிட்டி பண்ண ஆரம்பித்தார்.

குறட்டை விட்டுத் தூக்கம்

குறட்டை விட்டுத் தூக்கம்

எப்படியோ சத்தம் கேட்டால் எழுந்து கொள்ளலாம் என முடிவு செய்த சோமசேகர், ரியோ, ரம்யா மற்றும் கேபி ஆகியோர், கார்டன் ஏரியாவிலேயே படுக்கையை விரித்து குறட்டை விட்டுத் தூங்கி விட்டனர். பந்து அனுப்ப இரவு முழுவதும் தாமதம் ஏற்பட்டதால், அந்த டீம் நல்லா ரெஸ்ட் எடுத்தது.

Recommended Video

ஒட்டு கேட்டுட்டு பேசுறாரு ஆரி | ஓவர் ரியாக்ட் பண்ண அனிதா
பாலாவுக்கு ரெட் பால்

பாலாவுக்கு ரெட் பால்

அனிதா பண்ண அலப்பறை தாங்க முடியாமல் கடுப்பான பிக் பாஸ் குழுவினர் சத்தம் போட்டு பந்தை அனுப்பினர். உடனே தூங்கிக் கொண்டு இருந்த சோம் அணியினர் எழுந்து வருவதற்குள் மிகப்பெரிய சிகப்பு பந்தை பாலா பிடித்து மொத்த ஸ்கோரையும் பூஜ்ஜியம் ஆக்கிக் கொண்டார். ஆனால், அதைத் தான் தொடவே இல்லை என்றும் போங்காட்டம் ஆடிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X