Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நீ வேலை செய்ய மாட்டேன்னு தூங்குவ.. நீ சுவாரஸ்யம்.. நான் போரிங்கா.. பாலாஜியை வெளுத்து விட்ட ஆரி!
சென்னை: கண்ணாடி சிறைக்குள் ரெண்டாவது முறையாக அடைபட்ட ஆரி, இந்த முறை ரொம்பவே டென்ஷன் ஆகிட்டார்.
Recommended Video
பொங்கல் வச்ச பஞ்சாயத்தை பேசி தீர்க்க சென்ற அர்ச்சனா அக்காவுக்கும் ஆரிக்கும் முட்டிக் கொள்ள, நடுவில் மூக்கை நுழைத்த பாலாஜியை வெளுத்து வாங்கி ரசிகர்களின் ஆதரவை பெற்றார் ஆரி.
இப்படித் தான் மூஞ்சிக்கு நேரா உடைச்சி விட்டுட்டு போகணும் பாஸ், இதுக்கும் மேலயும் அமைதியா இருக்காதீங்கன்னு ஆரிக்கே ரசிகர்கள் அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர்.
பொங்கல் பிரச்சனை
சாப்பாட்டுல கூட அர்ச்சனா அக்கா ஃபேவரிசம் பார்க்குறீங்கன்னு ஆதாரத்துடன் ஆரி எடுத்து சொன்னதும், அர்ச்சனாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நீங்க தான் ஆஜீத்தை சாப்பிட விடாம தடுத்தீங்க, அதைத்தான் சொன்னேன் என அர்ச்சனா ஆட ஆரம்பித்தவுடன், உன் ஆட்டத்தை வேற எங்கயாவது போய் ஆடு, என் கிட்ட திணிக்காத என நறுக்கென பேசி விட்டார்.
தலையாட்டி பொம்மை
ஆரிக்கு எதிராக பேச வேண்டும் என்றால், உடனே ஆஜராகி தலையாட்டி வரும் தலையாட்டி பொம்மையாக இந்த வீட்டில் ஆஜீத் மாறி விட்டார். ஆனால், ஆரியை தவிர அவரை யாருமே ட்ரூவா கேர் பண்ணல என்பதை போக போக உணர்ந்து கொள்வார். உனக்கு எக்ஸ்ட்ரா பொங்கல் பிடிக்குமான்னு கேட்டா? அதுக்கும் உடனே ஆமாம் சாமி போட்ட ஆஜீத்தையும் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
மூக்கை நுழைத்த பாலா
சனம் ஷெட்டியை எதுக்கெடுத்தாலும் மூக்கை நுழைக்காதீங்கன்னு சொல்லிட்டு, எல்லாத்துலையும் முந்திரிக்கொட்டையாக மூக்கை நுழைத்து வருவது பாலா தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார். அர்ச்சனாவுக்கும் ஆரிக்கு அனல் பறந்த பிரச்சனை பார்த்ததும், நியூ மம்மிக்கு சப்போர்ட் பண்ண வந்துட்டார் பயில்வான் பிள்ளை.
நீ வேலை செய்ய மாட்டேன்னு சொல்லுவ
அர்ச்சனா சொல்லும் போது நீ வேலை செய்யமாட்டேன்னு சொல்லிட்டு தூங்கிட்டு இருப்ப, எதிர்த்து கேட்டா எல்லாத்தையும் எதிர்த்து பேசுவ, நீ சுவாரஸ்யமான போட்டியாளர்.. நான் போரிங்கா என மூஞ்சிக்கு நேராக நெத்தியில அடிச்ச மாதிரி பாலாஜியை வெளுத்து விட்ட ஆரியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நீ வா தலைவா
இங்க காமெடி பீசாவோ சைலன்ட் பீசாவோ இருந்தா யாருமே மதிக்க மாட்டாங்க, இந்த மாதிரி நியாயமா பேசுற நீ வா தலைவா உன்னை ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிறோம் என ஆரிக்கே அட்வைஸும் அன்பையும் ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொட்டி வருகின்றனர். பாலாஜியின் ஆட்டிட்யூட் ஷிவானிக்கு வேணா பிடிக்கலாம். ஆடியன்ஸ் யாருக்கும் பிடிக்கல என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.