கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் அவருக்கு அக்கறையாக மெஸேஜ் அனுப்பியுள்ளார் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை கடந்த 15 வாரங்களாக வார இறுதியில் தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன்.
வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்து வார இறுதியில் விசாரித்து வந்தார் கமல். அதன்படி தவறை தட்டிக் கேட்டும் நல்லதை பாராட்டியும் வந்தார்.

ஆங்கரிங் ஸ்டைலே வேற
வாரம் முழுக்க ஹவுஸ்மேட்ஸ் செய்யும் அட்ராசிட்டியை பார்க்கும் ரசிகர்கள் கமல் எப்போது வருவார் சாட்டைய சுழட்டுவார் என காத்திருந்தனர். இடையிடையே அரசியல் பேசினாலும் கமலின் ஆங்கரிங் ஸ்டைலே வேற என சிலாகித்தனர் ரசிகர்கள்.

8 மணி நேரம் நின்று
ஞாயிற்றுக் கிழமைக்கான எபிசோடும் சனிக்கிழமையே காட்சியாக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு எபிசோடும் தலா 4 மணி நேரம் என ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நின்றப்படியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் கமல்.

கிராண்ட் ஃபினாலே
சில எபிசோடுகளில் கால் வலியால் அமர்ந்தும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 6 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

கமலுக்கு ஆபரேஷன்
இதில் ஆரி டைட்டில் வின்னர் ஆனார். பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் ஆனார். நிகழ்ச்சியின் இடையில் பேசிய கமல், காலில் அறுவை சிகிச்சை செய்யப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார் கமல்.

வீடு திரும்ப வேண்டும்
அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னரான ஆரி, நடிகர் கமல் விரைவில் நலம் பெற வேண்டி டிவிட்டியுள்ளார்.

மனமார்ந்த வாழ்த்துகள்
அவர் பதிவிட்டிருப்பதாவது, அன்பார்ந்த கமல் சாருக்கு
உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைந்து நீங்கள் மேலும் பல உயரங்களும் சாதனைகளையும் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை இதுவரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











