தந்தையை இழந்த அனிதா சம்பத்..வீட்டிற்கு சென்று நேரில் ஆறுதல் கூறி விசாரித்த ஆரி..வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: அனிதா சம்பத்தின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார் ஆரி.

Recommended Video

Anitha வை நேரில் வந்து சந்தித்த Aari Arjunan | Bigg Boss Tamil

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் ஆரி, அனிதா சம்பத் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் நேர்மையாக விளையாடினர். அவர்களுக்குள் ஒரு நட்பு இருந்தது.

கடுமையாக கோபம்

கடுமையாக கோபம்

இதனால் சக ஹவுஸ்மேட்ஸ் அவர்களை ட்ரியோ என்று அழைத்தனர். அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் இருந்த போதும் நல்ல நட்பும் இருந்து வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆரியிடம் கடுமையாக கோபப்பட்டார் அனிதா.

தரம் தாழ்ந்து விமர்சனம்

தரம் தாழ்ந்து விமர்சனம்

கைகளை நீட்டியும் நாக்கை துருத்தியும் அனிதா நடந்து கொண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைதளங்களில் தரம் தாழ்ந்து விமர்சிக்கப்பட்டார் அனிதா.

காலமான தந்தை

காலமான தந்தை

இதன் எதிரொலியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் அனிதா சம்பத். அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அடுத்த ஓரிரு நாட்களிலேயே அவரது தந்தை மாரடைப்பால் காலமானார்.

அப்பாவுக்கு ஆரியை பிடிக்கும்

அப்பாவுக்கு ஆரியை பிடிக்கும்

பிக்பாஸுக்கு பிறகு தனது அப்பாவை அனிதா மீண்டும் பார்ப்பதற்குள்ளேயே அவர் இறந்தார். இதனால் அனிதா மீதான கோபம் அனுதாபமாக மாறியது. மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற அனிதா, தனது அப்பாவுக்கு ஆரியை பிடிக்கும் என்று கூறினார்.

அனிதா வீட்டிற்கு சென்ற ஆரி

அனிதா வீட்டிற்கு சென்ற ஆரி

மேலும் ஆரியிடம் தான் கோபப்பட்டதற்கும் தனது அப்பா வருத்தப்பட்டதாக கூறினார். இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரி, அனிதாவின் வீட்டிற்கு இன்று நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் ஆரி.

சகோதர உறவு நீடிக்கும்

சகோதர உறவு நீடிக்கும்

அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் அனிதா சம்பத் ஷேர் செய்துள்ளார். மேலும் ஆரியுடன் ஃபேமிலி நேரம் என்றும் வருகைக்கு நன்றி ஆரி என்றும் இந்த சகோதர உறவு நீடிக்கும் என்று நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

தைரியமாய் இருங்கள்

தைரியமாய் இருங்கள்

அனிதா ஷேர் செய்துள்ள இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், ஏன் இவ்வளவு டல்லா இருக்கிறீர்கள்? எப்போதும் போல சிரித்துக்கொண்டிருங்கள் என அறிவுரை கூறியுள்ளனர். மேலும் அப்பா உங்களுடன் தான் இருப்பார் தைரியமாய் இருங்கள் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X