நீ ஒரு ட்ரூ வாரியர் சனம்.. இந்த எவிக்‌ஷன் உனக்கு ஆனது இல்லை.. அடித்துச் சொன்ன நேர்மையின் சின்னம்!

சென்னை: சனம் ஷெட்டி வெளியேற்றத்தை ரசிகர்கள் மட்டுமல்ல பிக் பாஸ் போட்டியாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

Recommended Video

ட்ரூ வாரியர் சனம் !ஓவரா ஒப்பாரி வச்சு அழுத அனிதா | Bigg Boss Highlights

இந்த எவிக்‌ஷன் உனக்கு நடத்திருக்கக் கூடாது சனம் என நேர்மையின் சின்னம் என சனம் ஷெட்டியால் பாராட்டப்பட்ட ஆரி கமல் முன்பாகவே அடித்து சொன்னார்.

போன் கால் டாஸ்க்கிலும் சனம் ஷெட்டி பக்கம் நின்று வாதாடியவர் ஆரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை தான்

ஒருமுறை தான்

இதுபோன்ற வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறை தான் கிடைக்கும். விட்ராதீங்க நல்லா விளையாடுங்க என பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வெளியேறிய சனம் ஷெட்டி, கமல் அருகில் நின்றபடி அகம் டிவி வழியே பார்த்து சொன்னார். ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் அடுக்கினார்.

அழாத அனிதா

அழாத அனிதா

பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியேறியதும் நீங்க ரொம்ப அழுதீங்க அனிதா, அப்படியெல்லாம் அழத் தேவையே இல்லை. இன்னும் கொஞ்சம் நாளில் வெளியே சந்தித்து நண்பர்களாக மகிழ்வோம் என அனிதாவுக்கு ஆறுதல் சொன்னார் சனம் ஷெட்டி.

நல்லா விளையாடுங்க ரியோ

நல்லா விளையாடுங்க ரியோ

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போது, என்னை ரொம்பவே வார்ம் வெல்கம் பண்ணது ரியோ ப்ரோ தான், ரொம்ப நன்றி பிரதர், நல்லா விளையாடுங்க.. ஃபைனல் வரைக்கும் போகணும் என ரியோவுக்கு சனம் ஷெட்டி வாழ்த்துக் கூறினார். ரியோவும் சனம்க்கு நன்றி தெரிவித்தார்.

பாஸி அர்ச்சனா

பாஸி அர்ச்சனா

பாஸின்னு சொன்னா கவலைப்படாதீங்க அர்ச்சனா, நான் தான் உங்களுக்கு அந்த பட்டம் கொடுத்தேன் என சனம் சொன்னதும், அடிப்பாவி இப்போ வந்து சொல்ற என அர்ச்சனா வழக்கம் போல ஓவர் ரியாக்‌ஷனை கொடுத்தார். அது உங்களுக்கு நல்லா தான் இருக்கு, நீங்க உண்மையிலேயே ட்ரூ லீடர், நல்லா விளையாடுங்க என்றார்.

நேர்மையின் சின்னம்

நேர்மையின் சின்னம்

அடுத்ததாக நிஷாவிடம் பேசிய அர்ச்சனா, தனித்துவமா விளையாடுங்க, இங்க இருந்து நான் என்ன வேணா சொல்லலாம் என சிரித்தார். பின்னர், ஆரி பிரதர், நேர்மையின் சின்னமாக பிக்பாஸ் வீட்டில் நீங்க இருக்கீங்க, உங்களுக்கு டைட்டில் கிடைக்குமான்னு தெரியல, நான் உங்களுக்கு இந்த டைட்டில் கொடுக்கிறேன். கப் ஜெயிச்சிட்டு வாங்க என வாழ்த்தினார்.

ட்ரூ வாரியர் சனம்

ட்ரூ வாரியர் சனம்

உடனே நீ ஒரு ட்ரூ வாரியர் சனம்.. இந்த எவிக்‌ஷன் உனக்கு நடந்திருக்கக் கூடாது என கமல் முன்பாகவே, சனம் ஷெட்டிக்கு அநீதி நடத்தப்பட்டிருக்கிறது என்பதை ஓப்பனாக உடைத்து சொல்லி விட்டார் நேர்மையின் சின்னம் ஆரி. மக்களின் தீர்ப்பை மதிப்போம் என சனம் ஷெட்டி ரொம்ப கூலாகவே வெளியேறினார்.

வாயை பிதுக்கிய ஆஜீத்

வாயை பிதுக்கிய ஆஜீத்

சனம் ஷெட்டி போட்டியாளர்களை பார்த்து நல்லா விளையாடுங்க என்று சொல்லும் போது, மிக்சர் குரூப்களின் ரியாக்‌ஷன் வேற லெவலில் இருந்தது. அதிலும், ஆஜீத் வாயை பிதுக்கியும், கைகளை மடக்கியும் என்ன என்னவோ ரியாக்‌ஷன்களை கொடுத்து வருகிறார். இந்த வாரமும் நாம தப்பிச்சிட்டோம் என ஆஜீத், ஷிவானி எல்லாம் இருப்பது பிக் பாஸ் கொடுமை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X