ஆரியை அசிங்கப்படுத்திய அனிதா..இதையாவது கண்டிப்பாரா கமல்? இந்திய அளவில் ட்ரென்டாகும் ஆரி #AariArjunan

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் அனிதா ஆரியிடம் மோசமாக நடந்து கொண்டார். இதனை தொடர்ந்து ஆரி இந்திய அளவில் ட்ரென்ட்டாகி வருகிறார்.

Recommended Video

சென்னை: பேசாதீங்க.. கையை நீட்டி… உதட்டை கடித்து.. ஆரியை மிரட்டிய அனிதா… கடுப்பில் ரசிகர்கள்..!

அவரை அடிப்பது போன்று உதட்டைக் கடித்து, ரொம்ப ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் அனிதா.

அனிதாவின் இந்த மோசமான பிஹேவிங்கை பார்த்த ரசிகர்கள் அவரை சரமாரியாக கழுவி ஊற்றி வருகின்றனர.

ஆரிதான் வின்னர்

ஆரிதான் வின்னர்

பிக்பாஸ் வீட்டில் நேர்மையாக விளையாடும் போட்டியாளராக பார்க்கப்படுகிறார் ஆரி. இதனால் ஆரிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சியை நேர்மையாக நடத்தினால் ஆரிதான் வின்னர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளார் ஆரி.

சம்யுக்தா பேச்சு

சம்யுக்தா பேச்சு

யார் எவ்வளவு கேவலமாக பேசினாலும் அவமானப்படுத்தினாலும் பொறுமையாக ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாண்டு வருகிறார். சம்யுக்தா ஆரியை வளர்ப்பு சரியில்லை என்று கூறியதும் அவனே இவனே என்று பேசிய போதும் நிதானமாக கையாண்டார் ஆரி.

காலை நீட்டிய பாலாஜி

காலை நீட்டிய பாலாஜி

இதேபோல் ரியோ ஆரியிடம் மல்லுக்கு நின்ற போதும் இப்படிதான் நடந்துக் கொண்டார். அவரை தொடர்ந்து பாலாஜி பலமுறை ஆரியை அசிங்கப்படுத்தியுள்ளார். ஆரியை நோக்கி காலை நீட்டியிருக்கிறார், வேற எதையாவது நீட்டுவேன் என்று பேசியுள்ளார் மோசமான பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தியுள்ளார்.

அரிச்சந்திரனுக்கு அடுத்தப்பிறவி

அரிச்சந்திரனுக்கு அடுத்தப்பிறவி

அதோடு மற்ற ஹவுஸ்மேட்ஸிடமும் ஆரி குறித்து தவறாக பேசி அவரை டேமேஜ் செய்து வருகிறார். கமல் எபிசோடிலும் கூட அரிச்சந்திரனுக்கு அடுத்தபிறவி என்று கேவலமாக பேசினார்.

மானஸ்தனா இருக்கணும்

மானஸ்தனா இருக்கணும்

இதேபோல் கோழிப்பண்ணை டாஸ்க்கின் போது அர்ச்சனா நரியாய் இருந்தாலும் மானஸ்தானா இருக்கணும் என்று தரக்குறைவாக பேசினார். அப்போதும் எனக்கு மானம் ரோஷமெல்லாம் இல்லை என்று பக்குவமாக நடந்து கொண்டார் ஆரி.

அறிவில்லை என்ற ரம்யா

அறிவில்லை என்ற ரம்யா

இதேபோல் ரம்யா, ஆரிக்கு அறிவில்லை, மூளை இல்லை என்று பேசினார். அப்போதும் முதிர்ச்சியாகவே அதனை கையாண்டார் ஆரி. இதேபோல் சோம், கேபி, ஆஜித் என பலரும் ஆரியை வயது வித்தியாசம் இல்லாமல் ஆரியை அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

கண்டுகொள்ளாத கமல்

கண்டுகொள்ளாத கமல்

பிக்பாஸ் வீட்டில் உள்ள பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் ஆரியை கேவலப்படுத்தி விட்டு பின்னர் அவரிடம் சாரி சொல்லி விடுகின்றனர். இதனால் மன்னிப்பு கேட்டுவிட்டார்கள் என்று கமலும் அதை கண்டு கொள்வதில்லை. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் தனிமனித தாக்குதல்கள் வயது வித்தியாசமின்றி நடைபெறுகிறது.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

அதன் ஒரு பகுதியாகதான் இன்று அனிதாவின் பிஹேவிங்கும் இருந்தது. கிட்டத்தட்ட ஆரியை அடிப்பது போன்றே அவரது நடத்தை இருந்தது. இதனை புரமோவில் பார்த்த ரசிகர்கள், அனிதாவை கழுவி ஊற்றி வருகின்றனர். அதே நேரத்தில் ஆரியை பாராட்டி வருகின்றனர்.

ஆரி ட்ரென்டிங்

ஆரி ட்ரென்டிங்

இதனால் #AariArjunan என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் உள்ளது. ஆரியின் சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்காகவே ஆரியை தான் டைட்டில் வின்னராக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

திருப்பி கொடுக்கப்போறாரு

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி பாட்ஷா பட ரஜினி மாறி ஆயிட்டாரு பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ஒரு நாள் மொத்தமா வைச்சு திருப்பி கொடுக்க போறாரு என குறிப்பிட்டுள்ளார்.

அர்ச்சனா சொல்லும் போது..

அனிதாவின் மீமை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், கேவலமா இருக்கு பாக்கும் போது அர்ச்சனா சொல்லும் போது அக்செப்ட் பண்றாங்க.. அதுவே ஆரி சொன்னா ஏத்துக்க மாட்றாங்க ஏன் என கேட்டு அனிதாவை கிழித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X