மகுடம் சூடிய ஆரி.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. கொண்டாடும் ரசிகர்கள்.. வேற லெவல்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி வின்னரானதை தொடர்ந்து #AariArjunan என்ற ஹேஷ்டேக்ஸ் ட்ரென்ட்டாகி வருகிறது.

Recommended Video

#BiggBoss4Tamil டைட்டில் வின்னர் ஆரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு...ரசிகர்கள் மகிழ்ச்சி!

விஜய் டிவியில் 105 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

இதில் ஆரி அர்ஜூனன் வின்னர் ஆனார். அவருக்கு பிக்பாஸ் ட்ராஃபியும் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

ஆரி ட்ரென்டிங்

ஆரி ட்ரென்டிங்

ஆரிக்குதான் பிக்பாஸ் டைட்டிலை கொடுக்க வேண்டும் என கடந்த சில வாரங்களாகவே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர் . ஆரியின் பெயரை ட்ரென்ட் செய்தும் வந்தனர்.

ஆரி ஹேஷ்டேக்..

ஆரி ஹேஷ்டேக்..

இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றினார் ஆரி. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து டிவிட்டரில் #AariArjunan என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

வாழ்த்து மழை..

வாழ்த்து மழை..

நேற்று முதலே இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது. இந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் வின்னரான ஆரிக்கு வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.

மிக அரிது

மிக அரிது

ஆரி கப் வென்றதை குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், பொறுப்புள்ள, பொதுநலமுள்ள நபருக்கு கிடைக்கும் வெற்றி மிக அரிது. வாழ்த்துக்கள்! ஆரி அர்ஜூனன் அவர்களே என பதிவிட்டுள்ளார்.

ஆரியின் அடையாளம்

ஆரியின் அடையாளம்

மற்றொரு ரசிகரான இவர், நேர்மைக்கான பரிசு கிடைத்துவிட்டது. ஆரி நீங்கள் எதை எண்ணி உள்ளே சென்றீரோ அது நடந்துவிட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு ஆரியின் அடையாளம் தெரிந்துவிட்டது, அதுவே தங்களின் முதல் வெற்றியாகும் என பதிவிட்டுள்ளார்.

நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம்

நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம்

மற்றொரு ரசிகரான இவர், நேர்மைக்குக் கிடைத்த அங்கீகாரம். தமிழ் மக்களின் சிறந்த முடிவு. மிகச்சிறந்த வெற்றியாளர், ஆரி அர்ஜனனுக்கு உங்கள் ரசிகனின் அன்பார்ந்த வாழ்த்துக்கள். பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே தகுதியான வின்னர். அளவுக்கு அதிகமான அன்பு சார் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X