6 மணிக்கு மேல் அந்த நடிகர் வெளியே வரமாட்டார்.. அவருக்கு அந்த வியாதியா? விஜயை கேலி செய்த ஆர்த்தி!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரபல நடிகை ஆர்த்தி கணேஷ், நடிகர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் பேசினார்.

நடிகை ஆர்த்தி பிரச்சாரம்: திமுக வேட்பாளர் ஒ.ஜோதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி கணேஷ், நேற்று கட்சி ஆரம்பித்துவிட்டு இன்று முதலமைச்சர் ஆக வேண்டும் என ஒருவர் ஆசைப்படுகிறார். அவர் சிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அவருடன் நான் மூன்று படங்களில் நடித்துள்ளேன் என்பதால், உங்களை விட எனக்கு அவரை பற்றி நன்றாகவே தெரியும். அவரைப் போல நடனம் ஆட யாராலும் முடியாது. ஆனால், சட்டமன்றத்தில் டான்ஸ் ஆட முடியுமா, அப்படி டான்ஸ் ஆடினால் நம்ம நிலைமை என்னவாகும்.

Vijay TVK leader Aarthi Ganesh
Photo Credit:

அந்த வியாதியா?: சினிமா ஷூட்டிங் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்குள் முடிவடையும். ஆனால், அரசியல் அப்படியல்ல. அது முழுநேர பொறுப்பும் தொடர்ச்சியான செயல்பாடு கொண்டது. மூன்று மணிக்கு வந்துவிட்டு 6 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு செல்வது அரசியல் அல்ல. ஷூட்டிங் என நினைத்துக் கொண்டு மாலை 6 மணிக்கு மேல் அவர் வெளியவே வருவதில்லை. ஒரு படத்தில் கவுண்டமணிக்கு 6 மணிக்கு மேல் கண் தெரியாது. அது மாலைக்கண் நோயாக இருக்கும். அதுபோல இவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கா என்று தெரிவில்லை. யாரிடம் பேசமாட்டார், ஆனால், முகத்தை பார்த்து மட்டும் ஓட்டு போடுங்கள் என்பதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என ஆர்த்தி கணேஷ் பேசியது, தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X