மனைவி கிட்ட பாராட்டு வாங்குறதுனா சும்மாவா… ஜெயம் ரவியை பாராட்டிய மனைவி!

சென்னை : வாட்ட சாட்டமான உடல், பார்த்தவுடன் ரசிக்கும் முக அமைப்பு என அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் ஜெயம் ரவி

குறிப்பாக பெண் ரசிகைகளுக்கு இவர் என்றால் கொள்ள பிரியம். இவர் திரைத்துரைத்து பல ஆண்டுகள் ஆன போதும் இவர் மீதான ஈர்ப்பு சற்றும் குறையவே இல்லை.

மாறாக இவர் மீதான ஈர்ப்பு நாளுக்குநாள் கூடிக்கொண்டுதான் போகிறது.

அறிமுகம்

அறிமுகம்

ஜெயம் திரைப்படத்தில் அறிமுகமான ரவி அப்படத்திற்கு வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சமி, மழை , தீபாவளி, தாம் தூம், பேராண்மை என வெற்றிப்படங்களை கொடுத்து தொடர்ந்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

விவசாயத்தின் பெருமை

விவசாயத்தின் பெருமை

நிமிர்ந்து நில், தனி ஓருவன், டிக்டிக்டிக் ,கோமாளி, பூமி என சமூக அக்கறை உள்ள திரைப்படங்களை கலந்த சில நாட்களாக கொடுத்துள்ளார். இதில் சமீபத்தில் ஒடிடியில் வெளியான பூமி திரைப்படம் விவசாயத்தின் பெருமையையும் கார்ப்ரேட் முதலாளிகளால் எவ்வாறு விவசாயம் நசுக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக கூறி வெற்றி வாகை சூடிய திரைப்டமாகும்.

2 படம் கைவசம்

2 படம் கைவசம்

தற்போது இவர் 2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மணிரத்தினத்தின் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும்,ஜன கன மன என்ற திரைப்படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ஆர்த்தி

ஆர்த்தி

ஜெயம் ரவி 2009ம் ஆண்டு ஆர்த்தி திருமணம் செய்து கொண்டனர், அவருக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆர்த்தி சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், இவர் அடிக்கடி தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பாராட்டிய மனைவி

பாராட்டிய மனைவி

தந்தை தினத்தை முன்னிட்டு, ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியின் இரண்டு மகன்களுடன் இருக்கும் ஒரு த்ரோபேக் படத்தை பதிவிட்டுள்ளார். அதில், தனது மகன்களின் சார்பாக You are Daddy cool என்று படத்திற்கு தலைப்பிட்டுள்ளார். மேலும் , நீங்கள் சிறந்த அப்பாவாகவும், ஆலோசனைகளையும் சில நேரம் மோசமான நகைச்சுவைகளை சொல்கிறீர்கள் என்று ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, ஜெயம் ரவியை பாராட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X