ஆர்த்தி ரவி மகன்களுடன் குஷ்பு குடும்பமா நிக்கிறாரே.. ரவி மோகன் பார்த்தா என்ன ஆவார்?

சென்னை: நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், சமீபத்தில் பேட்டியளித்திருந்த நடிகர் ரவிமோகன், மூன்றெழுத்து இட்லி நடிகையால்தான் என்னுடைய குடும்பத்தில் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டது என்றும் என்னுடைய குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை, இனிமேல் தரக்குறைவாக பேசினால் அவ்வளவு தான் என நடிகையின் பெயரை குறிப்பிடாமல் பேசி இருந்தார்.

ஆர்த்தி ரவி: ரவிமோகன் கூறிய இந்த கருத்து சோஷியல் மீடியாவிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி நடிகை குஷ்புவுடன் நெருக்கமான நட்பில் இருக்கிறார். இருவரும் குடும்ப நண்பர்களாக இருந்து வருவதால், நடிகர் ரவிமோகன் கூறியது குஷ்புவைத்தான் என பலரும் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி இருக்கும் நிலையில், மன நிம்மதி தேடி நடிகர் ரவிமோகன் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து தனது விரதத்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் குடும்ப பிரச்சனையால் மனஅழுத்தத்தில் ரவிமோகன் புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

Aarthi Ravi Khushbu Ravi Mohan
Photo Credit:

கட்டிப்பிடித்து போஸ்: ஆனால், ஆர்த்தி ரவி அதைப்பற்றி கவலைப்படாமல் மகன் மற்றும் பெற்றோருடன் குடும்பமாக, நடிகை குஷ்புவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படத்தை நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவையில் நடிகை குஷ்புவை கட்டியணைத்தபடி ஆர்த்தி ரவி போஸ் கொடுத்துள்ளார். இந்த பதிவை பார்த்த இணைய வாசிகள் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ப்ளாக் மேஜிக் கேங் என்றும், ரவிமோகன் பாவம், இது தேவையில்லாத பதிவு என பலரும் நெகட்டிவ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே ரவிமோகன் மறைமுகமாக குஷ்புவை குறிவைத்து பேசி இருக்கும் நிலையில், தற்போது ஆர்த்தி ரவி குஷ்புவை கட்டியணைத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் தேவையில்லாமல் மேலும் சர்ச்சையை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக இணையவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X