அம்மாவ வில்லனாக்கிட்டாங்கனு ஆர்த்தி புலம்பல்.. கெனிஷாவுடன் ஜாலியாக இருக்கும் ரவி மோகன்.. என்ன ஆனது?

சென்னை: ரவி மோகனும், ஆர்த்தியும் கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு மகன்கள் இருக்கும் சூழலில்; ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார் ரவி. நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்துவருகிறது. இது ஒருபக்கம் இருக்க பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாகவும் பழகிவருகிறார் ரவி. சூழல் இப்படி இருக்க தனது விவகாரத்தில் தாய் சுஜாதாவை வில்லனாக்கிவிட்டார்கள் என்று ஆர்த்தி புலம்பியிருக்கும் நிலையில்; ரவி மோகன் போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சர்ச்சைகளிலோ, கிசுகிசுவிலோ சிக்காத நடிகர் என்ற பெயரோடு இருந்தார் ரவி மோகன். ஆனால் கடந்த 2024ஆம் ஆண்டு ரவி வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆர்த்தியை பிரிகிறேன்' என அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு அனைவரிடமும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் இந்த பிரிவு தொடர்பான முடிவை தன்னிடம் ஆலோசிக்காமலேயே அவர் எடுத்துவிட்டதாகவும்; பேசுவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக ஆர்த்தி கூறியிருந்தார்.

தாய் சுஜாதா வைத்த கோரிக்கை: எதற்காக ரவி இந்த முடிவை எடுத்தார் என்று பலரும் தலையை பிய்த்துக்கொண்டிருந்தபோது; தனக்கு தேவையான மரியாதையை ஆர்த்தி தரப்பு கொடுக்கவில்லை என்று விளக்கமளித்தார் ரவி. அதுமட்டுமின்றி இவ்விவாகரத்தில் ஆர்த்தியின் தாய் சுஜாதாவையும் தன்னுடைய அறிக்கையில் இழுத்துவிட்டிருந்தார். இதன் காரணமாக சுஜாதாதான் அனைத்துக்கும் காரணம் என்று ஒருதரப்பினர் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த ஆர்த்தியின் தாய்; தனது மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கோரிக்கையும் வைத்திருந்தார்.

Aarthi Ravi Painful Post About Mother Trends as Ravi Mohan Shares Happy Moments with Kenisha
Photo Credit:

ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி: ஆனால் தனது விவாகரத்து முடிவில் உறுதியாக நின்றார் ரவி. இனியும் அவரிடம் பேசி பயனில்லை என்பதை புரிந்துகொண்ட ஆர்த்தி; தனக்கு ஜீவனாம்சமாக மாதம் 40 லட்சம் ரூபாய் வேண்டும் என்று நீதிமன்றம் சென்றார். இந்த வழக்கெல்லாம் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதற்கிடையே தெரபிஸ்ட்டும், பாடகியுமான கெனிஷாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால்தான் ஆர்த்தியை ரவி பிரிகிறார் என்று பேச்சுக்கள் கிளம்பின. அதை முதலில் மறுத்தார் ரவி.

நெருக்கம் காட்டும் ரவி - கெனிஷா: ஆனால் காலப்போக்கில் ரவியும், கெனிஷாவும் நெருக்கமாக இருப்பது பொதுவெளிக்கு தெரியவந்தது. பல நிகழ்ச்சிகளுக்கு இரண்டு பேரும் ஜோடியாக வருவதையும் வழக்கமாக்கியிருக்கிறார்கள். அதை பார்த்து அவ்வப்போது அவர்களை மறைமுகமாக தாக்கி ஆர்த்தி இன்ஸ்டாகிராம் போஸ்ட்டும் போட்டுக்கொண்டிருந்தார். சமீப காலமாக இந்த விவகாரம் கொஞ்சம் அணைந்திருந்தது. இந்நிலையில் ரவி மோகனின் போஸ்ட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

புலம்பும் ஆர்த்தி; ஜாலியாக இருக்கும் ரவி: அதாவது கெனிஷாவை அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் ரவி. இது ஒருபக்கம் இருக்க; அவரது முன்னாள் மனைவி ஆர்த்தியோ, தனது தாயுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து, 'அம்மா கடந்த வருடம் உங்களுக்கு நன்றாக அமையவில்லை. சிலர் செய்த பிஆர் வேலை காரணமாக எனது கதையில் நீங்கள் வில்லியாக சித்தரிக்கப்பட்டீர்கள். உங்கள் மீது தவறாக பழி சுமத்தப்பட்டது. ஆனால் யார் உண்மையான குற்றவாளி என்பதை காலம் தெளிவுப்படுத்தியது' என்று நீண்ட போஸ்ட்டை போட்டிருக்கிறார்.

ஏற்கனவே இவ்விவகாரத்தில் சுஜாதாவின் பெயரை ரவிதான் இழுத்திருந்தார். எனவே ஆர்த்தி இந்தப் போஸ்ட்டின் மூலம் ரவியை தாக்கியிருக்கிறார் என்று கமெண்ட்ஸ் பறந்த நிலையில்; கெனிஷாவுடன் அவர் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X