குடும்பத்தின் கண்ணியம்.. நற்பெயரை சுசித்ரா கெடுத்துவிட்டார்.. ஆர்த்தியின் தந்தை பரபரப்பு புகார்!

சென்னை: தனது மகள் ஆர்த்தி ரவி குறித்து, பாடகி சுசித்ரா அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு,
குடும்பத்தின் கண்ணியத்தையும், நற்பெயரையும் கெடுத்துவிட்டார் என ஆர்த்தியின் தந்தை, காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடகி சுசித்ரா மீது புகார் அளித்துள்ளார். இதனால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ஆர்த்தி ரவி மற்றும் ரவி மோகன் இவர்களின் விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நடிகர் ரவி மோகன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்தில் தனது தோழி கெனிஷாவுடன் கைகளை கோர்த்தபடி வந்து இருந்தார். இதனால், கொந்தளித்து போன ஆர்த்தி, ரவி மோகன் தந்தை என்பதை மறந்துவிட்டார், எங்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நான் முன்னாள் மனைவி இல்லை என அடுக்கடுக்கான புகாரை கூறியிருந்தார்.

Ravi mohan Aarthi Suchitra

குடும்ப சண்டை: இந்த அறிக்கை வெளியானதும், ரவி மோகன் ஐந்து பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், என் முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், என் பெற்றோரை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. அவர் என்னை அவர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர். என் முன்னாள் மனைவி என்னை பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார் என்று கூறியிருந்தார். இதையடுத்து, ஆர்த்தியின் மாமியார் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், நான் ஜெயம் ரவியை மகனாக பார்தேன், எந்த தாயும் மகள் நன்றாக வாழ வேண்டும் என்று தான் நினைப்பார்கள் என்று கண்ணீரோடு அந்த அறிக்கையில் கூறியிருந்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர்.

வரம்பு மீறிய பாடகி: இந்த நேரத்தில் பாடகி சுசித்ரா, தனது இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவி வேறு ஒரு நடிகருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, மோசமான விஷயத்தி பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல், யூடியூப் சேனலுக்கு ஒன்றுக்கு பேட்டி அளித்த சுசித்ரா, ஆர்த்தி அந்த நடிகருடன் தவறான உறவில் இருந்தார் என்றும், ஜெயம் ரவியை வெறுப்பேத்துவதற்காக அப்படி செய்தார் என்று கூறியிருந்தார். ஏற்கனவே, ஜெயம் ரவி, ஆர்த்தி விவகாரம் பெரும் புயலை கிளப்பி இருந்த நிலையில், சுசித்ரா இப்படி பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.

அவதூறான செய்தி: இந்நிலையில், ஆர்த்தி ரவியின் தந்தை விஜயகுமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடகி சுசித்ரா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், சுசித்ராவின் இந்த ஆபாசமான மற்றும் தவறான கருத்துக்கள் எனது மகள் மற்றும் மனைவியின் கண்ணியத்தையும், தனியுரிமையையும் பாதிக்கிறது. மேலும், எனது குடும்பம் மற்றும் என்னைப் பற்றிய அவரது வீடியோக்கள் மற்றும் பதிவுகள் தமிழ் திரைப்படத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் நாங்கள் இத்தனை ஆண்டுகளாக நாங்கள் காத்து வந்த, கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளார். பல சதாப்பங்களாக கடின உழைப்பால் சம்பாதித்த எங்கள் குடும்பத்தின் கண்ணியத்தையும், நற்பெயரையும் சுசித்ரா ஒரு கணம் அவதூறு செய்துவிட்டார் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ரவி மோகனின் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நடிகர் ரவியின் திருமண, விவாகரத்து தொடர்பான செய்திகளை தனிநபர்களுக்கும் ஊடகங்களுக்கும் தவிர்க்க வேண்டும் என்றும் அதை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X