Aarti Ravi: ஆட்டுகல் பொங்கல் வைத்து வழிபட்ட ஆர்த்தி ரவி.. குடும்பம் நல்லா இருக்கணும் பகவதி அம்மே!

சோட்டானிக்கரை: ஆர்த்தி ரவி தமிழ் சினிமாவில் நடிக்க வில்லை என்றாலும் அவர் தமிழ் சினிமா பிரபலமாகத்தான் அறியப்படுகிறார். பக்காவான கதாநாயகி மெட்டீரியல் என்றாலும் அவர் தனது குடும்பத்தை கவனித்துக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் ஆட்டுகல் பொங்கல் வைத்து வழிபட்டது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆர்த்தி ரவி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே தனது கணவர் ரவி மோகனை பிரிந்து வாழ்கிறார். ரவி மோகன் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் ஆர்த்தி ரவி தரப்பில் இருந்து ஜீவனாம்சம் கேட்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் தனது மகன்களுடனும் பெற்றோர் உடனும் வசித்து வருகிறார். இப்படி இருக்கையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் படிக்கும் புத்தகங்கள் குறித்த தகவல்கள், தனது மகன்கள் குறித்து ஏதாவது அப்டேட்களை பகிர்ந்து வருகிறார்.

Aarti Ravi Attukal Pongala Prayers at Kerala s Famous Bhagavathi Temple Amid Personal Challenges

குடும்ப நலன்: இப்படி இருக்கையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஆட்டுகல் பொங்கல் வைத்து வழிப்பட்டது தொடர்பான வீடியோவை ஸ்டோரியாக வைத்துள்ளார். ஆட்டுகல் பொங்கல் என்பது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வழிபடும் திருவிழா. லட்சக்கணக்கான பெண்கள் சாலையோரம் மண் அடுப்பில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகிறார்கள்.பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைப்பதால், இது கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Aarti Ravi Attukal Pongala Prayers at Kerala s Famous Bhagavathi Temple Amid Personal Challenges

ஆட்டுகல் பொங்கல்: மலையாள மாதமான கும்பம் மாதம் அதாவது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வரும் மலையாள மாதத்தில் மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கடைசி நாளில் தான் ஆட்டுகல் பொங்கல் வைக்கப்படுகிறது. இந்த வழிபாட்டை கேரளம் மாநிலத்தின் பெண்கள் சபரிமலை என்றும் அழைக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் உலக அளவில் பெண்கள் மட்டுமே அதிகம் கூடும் திருவிழாவாக இந்த திருவிழா இருக்கிறது. பெண்கள் இந்த திருவிழாவில் குடும்ப நலன், குழந்தைகள் நலன் மற்றும் குழந்தை வரம் வேண்டியும், நீண்ட ஆரோக்யத்திற்காகவும் விரதம் இருந்து ஆட்டுகல் பொங்கல் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவ்வகையில் தனது குடும்ப நலனுக்காக ஆட்டுக்கல் பொங்கல் வைத்து வழிபட்டுள்ளார் ஆர்த்தி ரவி. இது தொடர்பாக அவர் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் இது தான் ஆர்த்தி ரவியின் முதல் ஆட்டுகல் பொங்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X