சுயமரியாதை பற்றி பேசிய ரவி மோகன்.. அதிரடியாக பதில் கொடுத்த ஆர்த்தி.. இவ்வளவு கோபத்துடன் சொல்லிட்டாங்களே
சென்னை: நடிகர் ரவி மோகன் பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டில் பேசிய சில விஷயங்கள் ஆர்த்தியை மறைமுகமாக தாக்குவது போல் இருந்ததாக பேச்சுக்கள் எழுந்தன. அதற்கு ஆரம்பத்தில் ஆர்த்தி எந்த ரியாக்ட்டும் கொடுக்காமல் இருந்தார். ஆனால் இதை பற்றிய பேச்சு பலரிடம் எழுந்த சூழலில்; இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போஸ்ட்; ரவி மோகனுக்கு தகுந்த பதிலடி என ரசிகர்களால் கருதப்படுகிறது
ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் இடையே பிரிவு நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பிரிவை முதலில் அறிவித்தது ரவிதான். அவருடன் சேர்ந்து வாழ்ந்துவிடலாம் என ஆர்த்தி எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு ஆர்த்தியும் ஒத்துக்கொண்டார். அதேசமயம் மாதா மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக வேண்டும் என்று கேட்டு ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஆர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் பேச்சு: ஆர்த்தியிடமிருந்து பிரிந்த ரவி மோகன் பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கம் காட்டிவருகிறார். அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் இருப்பது நட்பு மட்டும்தானா இல்லை அதை தாண்டியும் பழகுகிறார்களா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இரண்டு பேரும் பொது இடங்களுக்கு ஒன்றாகவே வருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரவி பேசியிருந்தது பெரிய கவனத்தை ஈர்த்தது.

என்ன பேசினார்?: அவர் சுதா கொங்கரா பற்றி பேசுகையில், "நல்ல ஆண்களுக்கு மத்தியில் பெண் எப்படி பாதுகாப்பாக உணர்வாரோ அதேபோல் நல்ல பெண் இருக்குமிடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த பிரச்னையும் இல்லை. ஈகோவும் இல்லை" என்றிருந்தார். மேலும், 'பராசக்தி படத்தில் நான் நடித்ததற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இது சுயமரியாதையை காப்பாற்ற போராடும் படம். நானும் எனது வாழ்க்கையில் சுயமரியாதையை காப்பாற்ற போராடினேன்" என தெரிவித்தார். இந்த இரண்டு விஷயங்களிலும் முன்னாள் மனைவி ஆர்த்தியைத்தான் தாக்கியிருக்கிறார் என பேச்சுக்கள் எழுந்தன.
ஆர்த்தியின் பதிலடி: இந்நிலையில் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சுயமரியாதை மற்றும் கொடுமை பற்றிய குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் ஆதாரம் இல்லாமல் சுமத்தப்படுகின்றன. இப்படி சொல்பவர்கள் எப்போதும் தாங்கள் சொல்வதுபடி வாழ்வதில்லை. ஆனால் துரோகம் ஆதாரங்களுடன் வரும். மேடை என்பது நடிப்பதற்காக. ஆனால் நிஜ வாழ்க்கைக்கு நேர்மை தேவை. ஒருவர் மற்றவர் மீது பழி சுமத்த மேடையை பயன்படுத்தும்போது அது வெளிச்சத்தில் இருப்பவரைவிட பழி சுமத்துபவரை பற்றியே அதிகம் சொல்கிறது.
அதே மேடை வரும்: ஒருநாள் அவளுக்கும் அதே மேடையை பயன்படுத்தும் வாய்ப்பு வரும். அந்த நாள் நடிப்பாக இருக்காது. அது உண்மையின் வெளிப்பாடாக இருக்கும். அந்த நாள் அருகில்தான் இருக்கிறது. அவள் நம்பிய ஒரு நாயகனை ஒருகாலத்தில் காதலித்திருக்கலாம். ஆனால் பின்னர் அவள் அறிந்த வில்லனிடமிருந்து தப்பி உயிர் பிழைக்கிறாள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அவள் தன் சுயமரியாதையை நிலைநிறுத்துகிறாள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications