ஆர்த்தி ரவியின் அதிரடி.. பன்றியோடு சண்டை போடக்கூடாதாம்.. யாரை சொல்கிறார்?.. சூடுபிடிக்கும் பிரச்னை
சென்னை: ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரிவுக்கு பிறகு கெனிஷாவுடன் ரவி நெருக்கம் காட்ட; ஆர்த்தியோ சிங்கிளாக இருந்துவருகிறார். இந்நிலையில் அவர் அதிரடியாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வைத்திருக்கிறார்.
ரவி மோகன் - ஆர்த்தியின் திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. திடீரென அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்னைகள் நாளடைவில் வளர்ந்து பெரிய விரிசலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துவிட்டார் ரவி. ஆனால் இந்த முடிவில் தனக்கு விருப்பமில்லை என்பதைத்தான் தன்னுடைய அறிக்கைகள் மூலம் தொடர்ந்து உணர்த்திக்கொண்டே இருந்தார் ஆர்த்தி. ரவியோ பிரிவு முடிவிலிருந்து பின்வாங்குவதாக இல்லை.
என்ன காரணம்?: ஆர்த்தியை பிரிய வேண்டும் என்பதில் ரவி இவ்வளவு உறுதியாக நின்றதற்கு காரணமே, 'அவருக்கு ஆர்த்தியும், அவரது தாயும் கொஞ்சம்கூட மரியாதை கொடுக்கவில்லை. அவரது சம்பள பணத்தை எல்லாம் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்' என்று ஒருதரப்பினர் சொன்னார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் ரவியும் தன்னுடைய அறிக்கைகளில் ஆர்த்தியின் தாய் சுஜாதா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம்: எப்படியாவது ரவி மோகனை சமாதானப்படுத்திவிடலாம் என்றுதான் ஆர்த்தியும் அவரது தாயும் கணக்கு போட்டிருந்தார்கள். ஆனால் ரவியோ கொஞ்சம்கூட பிடிகொடுக்கவில்லை. இனிமேல் இது வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த ஆர்த்தி, 'மாதா மாதம் ஜீவனாம்சமாக தனக்கு 40 லட்சம் ரூபாயை ரவி கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். அவரது இந்த கோரிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.
கெனிஷாவுடன் நெருக்கம்: இது ஒருபக்கம் இருக்க ஆர்த்தியுடனான பிரிவுக்கு பிறகு கெனிஷாவுடன் ஓவர் நெருக்கம் காட்டிவருகிறார் ரவி. இரண்டு பேரும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். விரைவில் அவர்களது திருமணம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று திரைத்துறையிலிருந்து தொடர்ந்து உறுதியான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆர்த்தியை பொறுத்தவரை சிங்கிள் மதராக தனது இரண்டு மகன்களோடு இருக்கிறார். அவர் இன்னொரு திருமணம் செய்துகொள்வாரா மாட்டாரா என்பது எதிர்காலத்தில் தெரியவரும். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆர்த்தி வைத்திருக்கும் ஒரு ஸ்டோரி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த ஸ்டோரியில், " ஒரு தெரபிஸ்ட் சொன்னது: பன்றியுடன் சண்டையிடாதே. நீயும் பன்றியும் சேற்றில் சிக்கிவிடுவீர்கள். ஆனால் அந்த சேற்றை ரசிப்பது என்னமோ பன்றிதான்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
யாரை சொல்கிறார்?: இதை பார்த்த ரசிகர்களோ, ஆர்த்தி ரவி பன்றி என்று யாரை சொல்கிறார். தனக்கு எதிர் தரப்பில் இருப்பவர்களைத்தான் பன்றியோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்திருக்கிறாரோ; என்ன இப்படி அதிரடியாக பேச ஆரம்பித்துவிட்டார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











