Aarti Ravi: என்னவோ போ.. மனக்குமுறலை இன்ஸ்டாகிராமில் கொட்டிய ஆர்த்தி ரவி.. யாருக்குத்தான் வலிக்காது?

சென்னை: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி தம்பதியர் தமிழ் சினிமா உலகில் பலருக்கும் பிடித்த தம்பதியர்களில் இடம் பெற்றிருந்தார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ரவி மோகன் ஆர்த்தியுடனான திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன் பின்னர் அவர்களது மகன்களை ஆர்த்தியே கவனித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தி பதிவிட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆர்த்தி வெளிநாட்டிற்குச் சென்று எம்.பி.ஏ படித்தவர். திருமணத்திற்குப் பின்னர் இல்லத்தரசியாக இருந்து வந்தார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். செம ஜாலியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியர்கள், ரசிகர்களின் பிரியப்பட்ட தம்பதியர்களில் ஒரு ஜோடியாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பெறப்போகிறார்கள் என்ற தகவல் முதலில் உலா வந்தது. புரளியைக் கிளப்புகிறார்கள் என பலரும் பேசி வந்த நிலையில், ரவி மோகன் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்க, அவர்கள் பிரிவுக்கு காரணம், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் நெருங்கி பழகியது தான் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பான கேள்விகளுக்கு இது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயம், அது குறித்து யாரும் கேள்வி கேட்காதீர்கள் எனக் கூறினார்.

Aarti Ravi Emotional Reaction on Instagram Post about Her Sons after Ravi Mohan Leaving
Photo Credit:

பதிலும் பதிலடியும்: அதன் பின்னர் கெனிஷாவுடன் இணைந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் கலந்து கொள்ள, அன்றைய நாள் ஆர்த்தி ரவி, கெனிஷாவின் பெயரைக் குறிப்பிடாமல், ரவி மோகனை காட்டமாக விமர்சித்து பெரிய கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதற்கு ரவி மோகனும் தனது பதிலை கொடுக்க, அவர்கள் விவகாரம் ஹாட் டாப்பிக்காக மாறியது. ஒரு கட்டத்தில் தனி மனித தாக்குதலாக இது மாறும்போது, இருவர் தரப்பில் இருந்தும் வக்கீல் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் குறித்த பேச்சுகள் இணையதளத்தில் அடங்கியது.

யாருக்குத்தான் வலிக்காது: சில தினங்களுக்கு முன்னர், ஆர்த்தி தனது மூத்த மகனின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எமோஷனலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றை தினத்தில் எந்தவிதமான வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. இப்படி இருக்கும்போது ஆர்த்தி ரவி தனது மகன்கள், தயார் மற்றும் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தவர், " எங்க இருக்கோம், எங்கயோ இருக்கோம் ஆர்த்தி அக்கா" என பதிவிட்டிருந்தார். இந்த பதிவை தனது ஸ்டோரியில் பகிர்ந்த ஆர்த்தி " என்னவோ... போ" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இரண்டு மகன்களையும் தனியாக ஆளாக்குவது என்பது மிகவுமே சவாலான விஷயம் தான், நம்பிய கணவரும் கைவிட்டுவிட்டார், அதை நினைக்கும்போது யாருக்குத்தான் கஷ்டமாக இருக்காது என பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X