Jayam Ravi: முதல்ல அதை பண்ணதே ஆர்த்தி தான்.. இப்ப தெரியவே தெரியாதுன்னு சொல்றாங்க.. கிளம்பிய சர்ச்சை!

சென்னை: நடிகை சமந்தா பாணியில் முதலில் இன்ஸ்டாகிராமில் விவாகரத்து வதந்தியை பற்ற வைத்ததே ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தான் என்றும் ஆனால், நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து பற்றி அறிவித்த நிலையில், தனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது என எப்படி சொல்லலாம் என சமூக வலைதளங்களில் ஜெயம் ரவி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எடிட்டர் மோகனின் மகன்களான மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவருமே சினிமாவில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்து பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வருகின்றனர்.

jayam ravi aarti ravi divorce

ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

தாஜ்மகாலில் போட்டோஷூட்: கடந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு தாஜ்மகால் சென்ற ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் தாஜ்மகாலில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சினிமா படப்பிடிப்பு போல நடைபெற்று இருந்தது. தமிழ் சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு திடீரென ஸ்டைலிஷ் ஐகானாக ஆர்த்தி ரவி கடந்த சில ஆண்டுகளாக மாறி இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட போட்டோக்களை பதிவிட்டு வந்தார். புதிதாக பிசினஸ் ஒன்றையும் தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கணவர் புகைப்படங்கள் டெலிட்: ஆர்த்தி ரவியின் அப்பா கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் தொழிலதிபராக உள்ளார். அவருடைய அம்மா சுஜாதா விஜயகுமார் தயாரிப்பாளர். ஜெயம் ரவி நடித்த பல படங்களை சுஜாதா தயாரித்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இடையே விரிசல் என்றும் இருவரும் விரைவில் பிரியப் போவதாக வதந்திகள் கிளம்ப காரணமே சமந்தா ஸ்டைலில் இன்ஸ்டாகிராமில் திடீரென தனது கணவர் ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஆர்த்தி ரவி நீக்கியது தான் என ஜெயம் ரவி ரசிகர்கள் தற்போது சோஷியல் மீடியா முழுவதும் ஆர்த்தி ரவிக்கு எதிரான போஸ்ட்டுகளை போட ஆரம்பித்து விட்டனர்.

எனக்கு எதுவுமே தெரியாது: ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் பிரியப் போவதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் வெளியான நிலையில், அவை செய்திகளாகவும் மாறின. கடந்த மாதம் முழுவதும் இதுபற்றிய செய்திகள் புகைந்து வந்த நிலையில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இருவருமே அமைதி காத்து வந்தனர். ஆனால், திடீரென ஜெயம் ரவி அதை உறுதி செய்த நிலையில், ஒரு நாள் கழித்து ஆர்த்தி ரவி தனக்கு எதுவுமே தெரியாது என பிளேட்டையே திருப்பி ஜெயம் ரவி பக்கம் போட்டு விட்டார் எனக் கூறுகின்றனர்.

விவாகரத்து பெறுவதில் சிக்கல்: ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து இருவரது சம்மதத்துடன் நடைபெறவில்லை என்கிற நிலையில், எளிதாக விவாகரத்து பெற முடியாது என்றும் இந்த வழக்கை அவ்வளவு எளிதில் ஆர்த்தி ரவி விட்டு விட மாட்டார் என்றும் கூறுகின்றனர். ஆர்த்தி ரவி குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம் என ஒரே போடாக போட்ட நிலையில், ஜெயம் ரவியிடம் மகன்களை ஒப்படைக்க மாட்டார் என்பதும் உறுதியாகி உள்ளது. இந்த விவகாரம் இன்னமும் பெரிதாக வெடிக்கும் என்று கூறுகின்றனர். ஆர்த்தி ரவியின் இந்த அறிக்கைக்கு ஜெயம் ரவி இன்னமும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X