Aarthi Ravi: மதிக்காதவர்களுக்கு இத செஞ்சே ஆகணும்.. ரவி மோகனுக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கிறாரா ஆர்த்தி ரவி?
சென்னை: கடந்த ஆண்டே ஆர்த்தி ரவியைப் பிரிவதாக ரவி மோகன் தெரிவித்திருந்தாலும், அவர்களின் விவாகரத்து வழக்கு இன்னும் நீதி மன்றத்தில் தான் நிலுவையில் உள்ளது. இப்படி இருக்கும்போது இவர்களின் சமூக வலைதள பதிவுகள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை எப்போதும் ஈர்த்து வருகிறது. அப்படி ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
அதாவது, நடிகர் ரவி மோகனின் காதல் மனைவி ஆர்த்தி ரவி. ஆர்த்தி ரவி சினிமாக்களில் நடிக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் சினிமா பிரபலங்களுக்கு இணையான பிரபல்யத்தை பெற்றவர். இவரது சமூக வலைதள பதிவுகளுக்கு ரசிகர்கள் எப்போதும், லைக்குகளையும் கமெண்ட்களையும் மாறி மாறி பகிர்ந்து கொண்டே இருந்துள்ளார்கள். இப்படி இருக்கும்போது, ரவி மோகன், ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்தபோது, ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆர்த்திக்கு ஆதரவாகத்தான் கருத்துக்களை தெரிவித்தனர். இது ஒரு புறம் இருக்க, ரவி மோகனின் தோழி, கெனிஷா தான் அவர்களின் பிரிவுக்கு காரணம் என்று வாக்குவாதத்தில் எல்லாம் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.

ரவி மோகன்: அவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதால், ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி ஆகியோரின் சமூகவலைதளப் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் பெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது, ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் டிசம்பர் மாதத்தை பற்றியதாக இருக்கிறது என்றாலும், அதில் அவர் எழுதி உள்ள ஒரு வரி, மறைமுகமாக ரவி மோகனை அட்டாக் செய்வதைப் போல இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
மறைமுகமாக அட்டாக்: அதாவது, ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " டிசம்பர் - குழப்பத்தை நீக்குங்கள், மன அழுத்தத்தை நீக்குங்கள், உங்களை மதிக்காதவர்களை நீக்குங்கள், ஆண்டின் கடைசி மாதம் இன்னும் முக்கியமானது, உங்கள் மீது கனிவாக இருங்கள், டிசம்பர் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த பலரும் ரவி மோகனுக்கு ஆர்த்தி ரவியின் அருமை தெரியவில்லை. அதனால் தான் அவரை மறைமுகமாக அட்டாக் செய்வதைப் போல, உங்களை மதிக்காதவர்களை வாழ்க்கையில் இருந்து நீக்கி விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆர்த்தி ரவியின் இந்த போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











