Aarti Ravi: நல்லா பாரு.. நான் ஜம்முனு இருக்கேன்.. யாருக்கு மறைமுகமாக மெசேஜ் சொல்கிறார் ஆர்த்தி ரவி?

சென்னை: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளதால், ஆர்த்தி மற்றும் ரவி மோகன் நடவடிக்கைகள் மீது கூடுதல் அட்டென்சன் விழுந்துள்ளது. குறிப்பாக அவர்களின் சமூக வலைதளத்தில் ஏதாவது பகிர்ந்தால் அது குறித்த விவாதம் ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்துவிடுகிறது. இப்படி இருக்கும்போது, ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொத்தம் 19 புகைப்படங்களை பகிர்ந்து, அந்த 19 புகைப்படங்களுக்கும் தனி தனி கேப்ஷன் இட்டுள்ளார். இந்த கேப்ஷன்கள் மூலம் யாருக்கோ மறைமுகமாக மெசேஜ் சொல்கிறார் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

அவரது கேப்ஷன்களில்,

1. தியானத்தில் இருந்தபோது தற்செயலாக உள் அமைதியை அடைந்தேன். அது ஏற்கனவே எனக்குள் இருந்திருக்கலாம்.

2. இப்போது நான் எதன் மீதும் பற்றில்லாத மனநிலையில் இருக்கிறேன். இதனால் எனது உலகில் மனிதர்களோ, நாடகங்களோ இல்லை. அமைதி மட்டுமே உள்ளது.

Aarti Ravi Instagram Post Creates Talks About She Attacks Indirectly to Ravi Mohan
Photo Credit:

3. இதைப் பார்க்கும்போது விண்கலத்தை திருடுவதற்கு தயாராக இருப்பது போல் தோன்றலாம், ஆனால் அறிவியல் புனைகதை கதாபாத்திரம் ஒருபோதும் தீங்கு விளைவிப்பதில்லை.

4. எனக்கு இங்கு எதற்கும் பதில்கள் தேவைப்படவில்லை. மாறாக அமைதி மட்டுமே தேவைப்படுகிறது.

5. குணமாதல் என்பது உறுதியைக் கொடுப்பதில்லை. மாறாக அது ஒரு சுண்டு விரல் போல ஐந்தில் ஒன்றாக உள்ளது.

6. கர்மா தன் வேலையை செய்கிறது-நான் சும்மா கதையைப் படித்து கொண்டு இருக்கிறேன்.

7. ஒரு ரசிகர் மன்றம் இருந்தால் நான் அதன் தலைவியாக இருப்பேன். அதற்கான சரியான நேரமாகவும் அதற்கான அறிகுறியாகவும் தான் இந்த நேரம் போல 11:11

8. நாட்குறிப்பு எழுதுவது என்பது ஹீலிங்கை விட மிகவும் எளிமையானது. மனதுக்கு பிடித்த பேனாவில் எழுதும் போது, ஏதோ இரட்டை வெற்றி பெற்றது போல உள்ளது.

9. நன்றாக உடற்பயிற்சி செய்.

10. பெண்களும் பூக்களும், இந்த இரண்டுக்கும் ஏதோ ஒன்று உள்ளது.

11. புண்பட்ட மனதை பிரியாணி கொண்டு ஆற்று.

12. ஒரு கையில் காபி இருந்தாலும் புகைப்படத்திற்கு பின்னால் இருப்பவர்கள் தான் எனது எமோஷனல் ஸ்ட்ரென்த்.

13. இந்த நாய்கள் பேசுவதில்லை, நடிப்பதில்லை, அது வாலை ஆட்டிக் கொண்டு உண்மையாக இருக்கின்றன.

14. புத்தகங்கள் எல்லாவற்றையும் சரி செய்யாவிட்டாலும், எதுவும் இல்லாத போது ஒரு பெண்ணை உறுதியாக வைத்திருக்க புத்தகங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.

15. அந்த நாட்களை எண்ணிக் கொண்டேன் நான் உடற்பயிற்சி செய்கிறேன்.

16. அமைதி என்பது நிலையானது அல்ல, அது ஓய்வற்றது என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

17. வாழ்க்கை நல்லதும் கொண்டிருக்கும் கெட்டதும் கொண்டிருக்கும்.

Aarti Ravi Instagram Post Creates Talks About She Attacks Indirectly to Ravi Mohan
Photo Credit:

18. நமது நிலைப்புத் தன்மை என்பது எப்போது கேள்விக்குரியது தான். ஆனால் நமது உழைப்பு என்பது அப்படியானதாக இருக்க கூடாது.

19. ஒரு நிலாவைப் போல ஒரு பெண் மிளிர்கிறாள் என்றால், அவள் வாழ்க்கையில் பல நெருக்கடிகளை கடந்து வந்தவளாக இருக்க வேண்டும்.

- இவ்வாறு ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த புகைப்படங்களையும் அதன் கேப்ஷன்களையும் பார்த்த ரசிகர்கள், தான் வலிமையாக இருக்கிறேன், ரவி மோகன் விவாகரத்து வேண்டும் என்று கூறிவிட்டதால் எனது வாழ்க்கை முடங்கி விடாது என இவர் மறைமுகமாக நடிகர் ரவி மோகனுக்கு தான் மெசேஜ் சொல்கிறார் என பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X