பொண்ணுங்க காதலுக்காக தியாகம் செய்வதற்கு முன்.. வாழ்க்கையில் உறுதியாக நில்லுங்க.. ஆர்த்தி ரவி அட்வைஸ்

சென்னை: ஆர்த்தி ரவி, நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் என தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகம் பெற்றவர். கடந்த ஆண்டில் இருந்து தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். ஆனாலும் அதற்கு முன்னர் இருந்தே இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம், ஆதரவு பட்டாளம் இன்ஸ்டாகிராமில் உள்ளது. இப்படி இருக்கும்போது, தனது இரண்டு மகன்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அவர் எழுதி உள்ள கேப்ஷன் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது இரண்டு மகன்கள் மற்றும் தனது செல்லப்பிராணி நாய் குட்டியுடன் தான் எடுத்துக் கொண்ட சில படங்களைப் பகிர்ந்துள்ள ஆர்த்தி ரவி அதற்கு எழுதி உள்ள கேப்ஷன் தனது சொந்த வாழ்க்கை அனுபவம் என்றாலும், அவர் எழுதி உள்ளது பலருக்கும் தேவைப்படும் அறிவுரை என்றே கூறலாம்.

Aarti Ravi Instagram Post Express Her Life Lesson For How To Be Independent Successful Women

தியாகி பட்டம்: அதாவது, " இங்கே உட்கார்ந்து இருப்பது பெருமைக்குரியது என்று நான் நினைக்கிறேன். பல பெண்கள் தங்கள் கனவுகளை நோக்கி ஓடாமல், இடையில் நிறுத்திக் கொள்கிறார்கள். தங்களது வேலைகளை அப்படியே விட்டு விடுகிறார்கள். அதை விட்டுவிட்டு விருப்பங்களில் கவனம் செலுத்துகிறார்கள். இப்படி எல்லாம் இருப்பதற்காக, எதுவும் செய்யாமல் வீட்டில் இருக்கும் பெண்களைப் பார்த்து சமூகம் கை தட்டுகிறது. அவர்களை தியாகி என்கிறது. உங்கள் மனதிற்கு பிடித்துள்ளது, சரி என்று தோன்றினால் காதலுக்காக சில சமரசங்கள் செய்யுங்கள். ஆனால் அந்த சமரசங்களுக்கு முன்னர் உங்கள் சொந்த காலில் நில்லுங்கள். ஏனென்றால் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் மாறும்.

பணம் ரொம்ப முக்கியம்: பணம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் இருக்க வேண்டும். நான் எனது மகன்களுடன் இருப்பது போல. இந்த சொந்த அனுபவத்தை நான் மிகவும் தாமதமாக கற்றுக் கொண்டு இருக்கலாம். ஒருவேளை நான் இப்படி எழுதி உள்ளதை படிப்பவர்களில் யாராவது இதை முன்னரே என்னைப் போல சொந்த அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டிருக்கலாம்" என்று எழுதி உள்ளார்.இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X