Aarti Ravi: நாயுடன் ஒப்பிடுகிறாரா ஆர்த்தி ரவி.. அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு என்ன அர்த்தம்!

சென்னை: ஆர்த்தி ரவி - ரவி மோகன் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தமிழ் சினிமாவில் பலரது கவனத்தை ஈர்த்த, அன்பைப் பெற்ற ஜோடியாக இவர்கள் இருந்து வந்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக ரவி மோகன் தெரிவித்தார். முதலில் இது கிசுகிசுவாக இருந்தாலும் அடுத்த சில மாதங்களிலேயே ஆர்த்தி மற்றும் தனது குழந்தைகளைப் பிரிந்தார் ரவி மோகன்.

இவர்களைப் பிரிந்ததும் அவர் செய்த முக்கியமான வேலையாக பார்க்கப்படுவது அவரது பெயர் மாற்றம் தான். அதற்கு முன்னர் வரை ஜெயம் ரவி என இருந்த ரவி மோகன், விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார். இவர்களது விவாகரத்துக்கு காரணம் பாடகி கெனிஷா என சிலர் கூறினார்கள். ஆனால் ரவி மோகனோ கெனிஷா தனது தோழி, நாங்கள் இருவரும் எதிர் காலத்தில் ஹீலிங் சென்டர் தொடங்கவுள்ளோம். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையில்லாமல் நுழையாதீர்கள் என காட்டமாக பேசினார்.

Aarti Ravi Instagram Story Goes Trend After Ravi Mohan Keneeshaa Srilanka Tour Photos Release
Photo Credit:

சில மாதங்கள் யாரும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசவில்லை. கெனிஷாவுடன் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து கொண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து, ஆர்த்தி ரவி வெளியிட்ட அதிரடி அறிக்கை, ரவி மோகன் விஷயத்தைப் பற்றி பேச வைத்தது. அதன் பின்னர் ரவி மோகன் மற்றும் கெனிஷா கொடுத்த விளக்கங்களும் இணையத்தில் பேசு பொருளாக மாறியது. ஆர்த்தி தனது அறிக்கையில் மூன்றாம் நபர் என்றே கெனிஷாவைக் குறிப்பிட்டு வந்தார். கெனிஷா என்ற வார்த்தையையே அவர் பயன்படுத்தவில்லை.

இலங்கை பயணம்: ஒரு வார காலம் நீடித்த கடித வழியிலான வாக்கு வாதம் அதன் பின்னர் மெல்ல மெல்ல அடங்கியது. இந்நிலையில் தற்போது ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் என இருவரும் இலங்கைக்குச் சென்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்துள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. ஏற்கனவே ரவி மோகனும் கெனிஷாவும் இணைந்து ஹீலிங் சென்டர் தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்கள், அது தொடர்பாக பேசச் சென்றிருக்கலாம் எனவும் இணையவாசிகள் கமெண்ட் அடித்தார்கள்.

Aarti Ravi Instagram Story Goes Trend After Ravi Mohan Keneeshaa Srilanka Tour Photos Release
Photo Credit:

ஆர்த்தி இன்ஸ்டா ஸ்டோரி: இந்நிலையில் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ள ஸ்டோரி மறைமுகமான ரவி மோகன் மற்றும் கெனிஷாவை குறிக்கிறது என பேசிவருகிறார்கள். அதாவது, "when your dog catches you petting another dog" என குறிப்பிடப்பட்டுள்ள ரீல்ஸை தனது ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். அதாவது 'நீங்கள் இன்னொரு நாயுடன் கொஞ்சிக் கொண்டு இருப்பதை உங்கள் செல்லப் பிராணி பார்த்துவிட்டால்' என்று பொருள். இதனைப் பார்த்த பலரும் என்ன ஆர்த்தி ரவி இந்த அளவுக்கு இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க எனவும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X