Aarti Ravi: கடவுளை ஏமாற்ற முடியாது.. ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்கிறாரா ஆர்த்தி? ஜப்தியில் ECR பங்களா
சென்னை: ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததில் இருந்து, ரவி மோகன் வாழ்க்கையில் ஏதாவது சம்பவம் நடந்தாலே ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இணையவாசிகள் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படித்தான் இப்போது ரவி மோகனின் ECR சொகுசு பங்களா ஜப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி, சில மணி நேரங்களில் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் இருக்கும் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். ஜெயம் ரவி என மக்களால் அறியப்பட்ட இவர், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டு விலகிய பின்னர் ரவி மோகன் என தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். ரவி மோகன், ஆர்த்தியை பிரிவதாக அறிவித்ததும் பலரும் ஆர்த்திக்கு ஆதரவாக நின்றார்கள். குறிப்பாக நடிகை குஷ்பு, த்ரிஷா போன்றவர்கள் ஆர்த்திக்கு ஆறுதல் தெரிவித்து வந்தார்கள். ரவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்த பின்னர் அவர்களின் குழந்தைகள் ஆர்த்தியுடன் உள்ளார்கள்.

வாக்கு வாதம்: ரவி மோகனும் அவரது தோழி கெனிஷாவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லத் திருமணத்திற்கு ஜோடியாக கலந்து கொண்டனர். அந்த சம்பவம் தொடர்பாக ஆர்த்தி நேரடியாகவே ரவி மோகனின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார். அதற்கு ரவி மோகனும் ஆர்த்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அட்டாக் செய்தார். இவர்களின் இந்த கடித சண்டை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களின் குழந்தைகளுக்கு பிறந்த நாள் வந்தால் கூட பலரும் ரவி மோகனை அட்டாக் செய்யத் தொடங்கி விடுவார்கள்.
சொகுசு பங்களா ஜப்தி: தற்போது ரவி மோகன் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ரவி மோகனுக்கு சொந்தமான சொகுசு பங்களா சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ளது. அந்த பங்களாவை வங்கியில் கடன் வாங்கி வாங்கியுள்ளார் போலத் தெரிகிறது. இப்படி இருக்கும்போது கடந்த 10 மாதங்களாக அந்த பங்களாவுக்கு தவணை செலுத்தாததால், வங்கி தரப்பில் இருந்து ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ரவி மோகன் தரப்பில் அந்த நோட்டீஸைப் பெற்றுக் கொள்ளாமல், வங்கியில் வந்து நேரடியாகவே பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்த்தி ரவி இன்ஸ்டா ஸ்டோரி: இந்நிலையில் தற்போது ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ள ஸ்டோரி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆர்த்தி ரவி தனது ஸ்டோரியில், " you can't fool god. you might fool others . you might fool yourself. but you can't fool god" எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, " கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்வது போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவரது இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது.


Click it and Unblock the Notifications











