விவாகரத்தில் உடன்பாடில்லை.. பேச காத்திருக்கிறேன்.. ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அதிரடி அறிக்கை!
சென்னை: ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் பற்றிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில், விவாகரத்தில் உடன்பாடு இல்லை என அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெயம் ரவி 9ந் தேதி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில், விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்துள்ளார் என்றும், அது என் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டது என ஆர்த்தி பதில் அளித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி, ஆர்த்திக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டேன். அவர், விவாகரத்து விஷயமே எனக்கு தெரியாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஜெயம் ரவி: ஒரு பாடகி ஒருவருடன் உடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார். அவர் பாடகியை தாண்டி ஒரு சைக்காலஜிஸ்ட், அவர் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். இருவரும் சேர்ந்து இலவசமாக சேவை செய்ய ஸ்பிரிச்சுவல் சென்டர் மாதிரி கூட ஆரம்பிக்கலாம் என்று இருந்தோம். இந்த பெண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள் என்று பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து, சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் மனைவி ஆர்த்தி மீது புகார் அளித்துள்ளார்.
மௌனம் பலவீனமல்ல: இதையடுத்து இந்த விஷயம் பூதாகரமானதைத் தொடர்ந்து தற்போது ஆர்த்தி, தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தை பற்றி பலர் பேசி வருகின்றனர். எனது மௌனம் பலவீனமோ, குற்ற உணர்வின் அடையாளமோ அல்ல என்பதை இங்கே வலியுறுத்துகிறேன். நான் கண்ணியமாக இருப்பதால், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்குத்தான் இந்த அறிக்கை. சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

ஜெயம் ரவியிடம் பேச வேண்டும்: இதற்கு முன் விவாகரத்து குறித்து அறிக்கையில் நான் சொன்ன வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்தித்து பேச அனுமதி கேட்டும் இதுநாள் வரை அனுமதி கிடைக்கவில்லை. விவாகரத்து விஷயத்தில் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன்.
நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன், யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வில் உள்ளது, மேலும் வழிகாட்டுதலுக்கான கடவுள் என்றும் எனக்கு துணை இருப்பார் என நம்புகிறேன் என ஆர்த்தி ரவி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











