பிரிந்து சென்ற ரவி மோகன்.. அன்னையர் தினம் கொண்டாடாத ஆர்த்தி.. மகன்களை நினைத்து உருக்கம்
சென்னை: ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். மேலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்கும் சென்றிருக்கிறார். இருவருக்கும் சமரசம் செய்து வைக்க நீதிமன்றம் முயன்றாலும் ரவியோ தனக்கு டைவர்ஸ் வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில்கூட ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு பாடகி கெனிஷாவுடன் அவர் வந்திருந்தது மேலும் பரபரப்பை கூட்டியது. இந்நிலையில் ஆர்த்தி உருக்கமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறது.
எந்த கிசுகிசு, சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த ரவி மோகனுக்கு கடந்த வருடத்திலிருந்தே நேரம் சரியில்லை போல. தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அவர் அறிவித்தார். இந்த பிரிவுக்கு முழு காரணமும் ஆர்த்திதான் என்றும்; அவரும் அவரது தாயாரும் ரவியை அதீத கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த டைவர்ஸ் முடிவு தன்னிடம் கலந்தாலோசிக்கப்படாமலேயே எடுக்கப்பட்டிருக்கிறது என்று ஆர்த்தி அந்த சமயத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கெனிஷாவுடன் தொடர்பு?: இது ஒருபக்கம் இருக்க ரவியும், பாடகி கெனிஷாவும் காதலிக்கிறார்கள். அதனால்தான் ஆர்த்தியிடமிருந்து ரவி விலகுகிறார் என்ற பேச்சுக்களும் எழுந்தன. ஆனால் அதனை ரவி திட்டவட்டமாக மறுத்தார். மேலும், தனக்கும் கெனிஷாவுக்கும் தொழில்ரீதியான நட்பு மட்டுமே இருக்கிறது. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு தியான மண்டபத்தை ஆரம்பிக்கப்போகிறோம். அதனை கெடுத்துவிடாதீர்கள் என்று விளக்கமளித்திருந்தார். இதனால் அந்த விவகாரம் கொஞ்சம் அடங்கிப்போனது.

உறுதி செய்த ரவி மோகன்?: இப்படிப்பட்ட நிலைமையில்தான் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணம் நடந்தது. அதற்கு கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார் ரவி. அதனைப் பார்த்த ரசிகர்களோ, தான் அடுத்ததாக கெனிஷாவைத்தான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்பதை சமூகத்திற்கு உணர்த்திவிட்டார் ரவி. அவசரப்பட்டு ஆர்த்தியை தவறாக பேசிவிட்டார்களே என்று கமெண்ட்ஸ் செய்கின்றனர். மேலும் நடிகைகள், குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோரும் ஆர்த்திக்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்த்தியின் அறிக்கை: விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோது கெனிஷாவுடன் ரவி வந்திருந்தது ஆர்த்தியை அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் ஆளாக்கியது. இதன் காரணமாக அவர் காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில்,'தந்தை என்பது வெறும் பட்டம் அல்ல. அது பெரிய பொறுப்பு. அதிலிருந்து அவர் நழுவி சென்றுவிட்டார். தன்னுடைய பெயர் இன்னமும் ஆர்த்தி ரவிதான். நீதிமன்றம் முடிவு செய்யும்வரை என்னை ரவியின் முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம். ஒரு தாயாக நான் குரல் எழுப்புகிறேன்' என்று பல விஷயங்களை குறிப்பிட்டு உருக்கத்தோடு தெரிவித்திருந்தார்.
ஆர்த்தியின் புதிய போஸ்ட்: இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி ஆர்த்தி தனது மகன்களுடன் ஊட்டியில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "நீ என்னை பார்க்கும் விதம் புரிகிறது. நான் ஓகேயாக இருக்கிறேனா இல்லையா என சோதிப்பது போல பார்க்கிறாய். ஆனால் உண்மையில் நான் கவலைப்படுவது எல்லாம் உன்னை பற்றி மட்டும்தான்.
வளர்ந்துகொண்டு இருக்கிறாய்: நீ வளர்ந்துகொண்டு இருக்கிறாய். ஆனால் நீ இந்த வழியில் வளர்ந்திருக்கக்கூடாது. இருந்தாலும் நீ துணிச்சலும், கனிவும் நிறைந்தவன். நான் முதுகெலும்புடன் போராடும் போர்களை நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும். இந்த அன்னையர் தினத்தை நான் கொண்டாடவில்லை. என்னுடன் நடந்துகொண்டிருக்கும் இரண்டு ஆன்மாக்களை நான் மதிக்கிறேன். நீங்கள் இன்னும் சிறுவர்கள்தான். இருப்பினும் வளர்ந்த மனிதர்களாகவும் ஆகிவிட்டீர்கள். இந்த உலகம் உங்களை சந்திப்பது அதிர்ஷ்டம். ஆரவ், அயன் நாம் நெருப்பின் வழியில் நடந்துகொண்டிருக்கலாம். ஆனால் ஒன்றாக நாம் அதை கடக்கிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











