திரிஷா - விஜய் மேட்சிங் ட்ரெஸ் பஞ்சாயத்து.. கொடூரமான செயல்.. ஏற்க முடியாது.. கொந்தளித்த ஆர்த்தி ரவி

சென்னை: விஜய்யும், திரிஷாவும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்டு திருமணத்தில் கலந்துகொண்டதுதான் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. சங்கீதா விவாகரத்து கேட்ட சில நாட்களிலேயே இப்படி ஒரு சம்பவத்தை தளபதி செய்வார் என்று அவரது ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து ஆர்த்தி ரவி போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சங்கீதா விவாகரத்து கேட்ட சில நாட்களிலேயே; திரிஷாவுடன் விஜய் ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார். இத்தனை வருடங்களில் அவர்கள் இரண்டு பேரும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஜோடியாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டதில்லை. ஆனால் இப்போது அவர்கள் அப்படி செய்ததன் காரணமாக; கண்டிப்பக சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் நடிகை திரிஷாதான் என்பதை உறுதி செய்து; அவருக்கு எதிராகவும் காட்டமாக பல கருத்துக்களை முன்வைத்துவருகிறார்கள்.

Aarti Ravi Reacts to Vijay Trisha Matching Outfit Controversy with Cryptic Instagram Story
Photo Credit:

திரிஷாவின் அமைதி: ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் திரிஷாவுக்கு எதிராக கருத்துக்கள் வந்தன. அவற்றில் பார்த்திபன் கூறியதற்கு மட்டும் கண்டனம் தெரிவித்தார் திரிஷா. தொடர்ந்து, நேற்று சென்னை விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள், 'விஜய்யுடன் நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சர்ச்சையாகியிருக்கிறதே' என கேட்க; அதற்கு அவர் பதிலே கொடுக்காமல் கூலாக நடந்து சென்றுவிட்டார்.

ரவி மோகன் சப்போர்ட்: இதற்கிடையே ரவி மோகன் சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அந்தப் பதிவில், "பெண்கள்தான் சரி என்று எப்போதும் நினைக்கிறீர்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதைக்கூட நீதித்துறை கூட புரிந்து வைத்திருக்கிறது. ஒருநாள் எனது மனதையும், நான் நேசிக்கும் மக்களுக்காக செய்தவைகளையும் நீங்களும் புரிந்துகொள்வீர்கள். தயவு செய்து ஒருவரை அமைதியாக வாழ விடுங்கள். உங்கள் தவறான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். நான் எனது பாதைக்கு திரும்புகிறேன்" என்றிருந்தார். இந்தப் பதிவின் மூலம் அவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக பலரும் கருதினார்கள்.

Also Read
கொள்கை எதிரி உடன் தேர்தல் கூட்டணி வைப்பதைவிட அரசியல் விப*சாரம் வேறு எதுவுமில்லை.. விளாசிய பிஸ்மி
கொள்கை எதிரி உடன் தேர்தல் கூட்டணி வைப்பதைவிட அரசியல் விப*சாரம் வேறு எதுவுமில்லை.. விளாசிய பிஸ்மி

ஆர்த்தி ரவியின் ஸ்டோரி: இந்நிலையில் கண்ணம்மா என்பவரது பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்திருக்கிறார் ஆர்த்தி ரவி. அந்த பதிவில், "இதுவே விவாகரத்து கிடைக்கும் முன்பே ஆர்த்தி இன்னொரு ஆணுடன் மேட்சிங்கான உடையில் சென்றிருந்தால் இந்த உலகம் ஏற்றுக்கொண்டிருக்குமா?. அப்படி செய்த பிறகு பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என ஆர்த்தி சொன்னால் அதை ஏற்க முடியுமா?.. இல்லை?.. அதனால் அப்படி செய்துவிட்டு பாதிக்கப்பட்டவன் என சொல்லும் ஆண்களை நாங்களும் கை காட்டுவோம். இது ஒரு கொடூரமான செயல்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவோடு, நேர்மைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நன்றி எனவும் ஆர்த்தி தெரிவித்திருந்தார்.

ரவி - ஆர்த்தி விவகாரம்: முன்னதாக, சில வருடங்களுக்கு முன்பு ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி எப்படியாவது மீண்டும் சேர்ந்து வாழ வேண்டுமென பல முயற்சிகளை செய்தார். அதற்கு ரவி ஒத்துவரவில்லை. அவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆர்த்தியை பிரிந்த ரவி; கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர்கள் ஒரே நிறத்திலான உடைகளை அணிந்துகொண்டு ஒரு திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அதை பார்த்துதான் விஜய்யும், திரிஷாவும் இப்படி செய்தார்கள் என பேசப்படுவது கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X