அதிகாலை 4 மணிக்கு பாய் பெஸ்ட்டியுடன்.. ஆர்த்தி ரவி ஓபன் டாக்.. அதுக்காகத்தான் அப்படியாம்
சென்னை: ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் ரவி மோகன்; திடீரென அவரை பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால் ரவியோடு சேர்ந்து வாழ்ந்துவிட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை ஆர்த்தி மேற்கொண்டதாகவும்; ஒன்றும் பலன் அளிக்கவில்லை என்றும் விவரமறிந்தவர்கள் சொன்னார்கள். இப்போது தனது மகன்களை வளர்க்கும் பொறுப்பில் இருக்கிறார் ஆர்த்தி. இந்நிலையில் அவர் பாய் பெஸ்ட்டி பற்றி போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ட்ரெண்டாகியுள்ளது.
ரவி மோகனும், ஆர்த்தியும் குஷ்பூ மூலமாக பழக்கமாகி காதலர்களாக மாறினார்கள். ரவி வீட்டில் ஏகப்பட்ட இழுத்தடிப்புக்கு பிறகு இந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார்கள். திருமணத்தை முடித்துவிட்டு இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆன அவர்கள் நல்லபடியாக வாழ்ந்துவந்தார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ரவி வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்திலும் பெரிய பேசுபொருளானது.

ரவி - கெனிஷா மாடல்: அதுமட்டுமின்றி இந்த பிரிவு அறிவிப்பு வெளியிட்ட சில நாட்களிலேயே கெனிஷாவும், ரவியும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஒரு திருமணத்தில் கலந்துகொண்டார்கள். சமீபத்தில் விஜய் - திரிஷாவும் அதே ஃபார்முலாவை கடைபிடித்திருந்தது கவனிக்கத்தக்கது. கெனிஷாவுடன் ரவி நெருக்கம் காட்டுவது அப்பட்டமாக தெரிந்த பிறகு; அவருடன் சேர்ந்து வாழ்வது என எடுத்த முயற்சிகளை எல்லாம் தொடராமல் அப்படியே நிறுத்திவிட்டார் ஆர்த்தி. மகன்களை வளர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார் அவர்.
மகன்கள்தான் எல்லாம்: அவரைப் பொறுத்தவரை மகன்கள்தான் இப்போதைக்கு எல்லாமுமாக இருக்கிறார்கள். குழந்தைகள் தினம், அன்னையர் தினத்துக்கெல்லாம் அவர்களை வைத்து ஆர்த்தி போடும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகள் எல்லாம் வைரலானது குறிப்பிடத்தக்கது. ரவியை பொறுத்தவரை அவரும் தன் பங்குக்கு மகன்களை கவனித்து வருகிறார். இருப்பினும் பெரும்பாலும் ஆர்த்தி வசம்தான் மகன்கள் வளர்கிறார்கள். எனவே நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற முழு முனைப்பும் அவருக்கு இருக்கிறது.
ட்ரெண்டாகும் போஸ்ட்: இந்நிலையில் ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் தனது பாய் பெஸ்ட்டியின் வாட்ஸ் அப் ப்ரொஃபைல் ஃபோட்டோவையும், அவருடன் பேசீய கால் ஹிஸ்டரியையும் போட்டு, "அந்த அதிகாலை நான்கு மணிக்கான பாய் பெஸ்ட்டி.. சில நேரங்களில் அதுவே வாழ்க்கையை ரீசெட் செய்ய போதுமானதாக இருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, 'ஆர்த்திக்கு செம பாய் பெஸ்ட்டியாக இருக்காங்களே. எவ்வளவு நேரம் பேசினாலும் பேசுவார் போல" என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
