மன வலிமை வேண்டும்.. பெண்கள்தான் குறையா?.. கொத்தித்து போன ஆர்த்தி ரவி.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க

சென்னை: ஆர்த்தியை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ரவி மோகன். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில்; சில வருடங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிவதாகவும் அறிவித்தார். சட்டப்பூர்வமாகவும் விரைவில் அவர்களுக்கு விவாகரத்து கிடைக்கவிருக்கிறது. இந்நிலையில் சிங்கிளாக மாறியிருக்கும் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

கோலிவுட், டோலிவுட்டில் ஃபேமஸாக இருந்த எடிட்டர் மோகனின் மகன் ஜெயம் ரவி இப்போது ரவி மோகனாக மாறியிருக்கிறார். பெரிய சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் தான் உண்டு, தனது குடும்பம் உண்டு என்று இருந்த அவர் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள். குடும்பம், குழந்தைகள் என நிம்மதியாக இருந்த ரவி தனது மாமியாரின் தயாரிப்பிலும் தொடர்ந்து படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Aarti Ravi s Emotional Instagram Post Goes Viral Amid Split With Jayam Ravi
Photo Credit:

இரண்டு பேருக்கும் பிரச்னையின் ஆரம்பம்: அப்படி அவர் நடித்ததுதான் பின்நாட்களில் பெரிய பிரச்னைக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதாவது வரிசையாக மருமகனை வைத்து படம் எடுத்த சுஜாதா சம்பள விஷயத்தில் சொதப்புவது, ரவி கேட்கும் கதைகளில் தலையிடுவது என இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ஆர்த்திக்கும் ரவிக்கும் இடையே அவ்வப்போது சின்ன சின்ன மனஸ்தாபமும் ஏற்பட தொடங்கிவிட்டது. சின்ன சின்ன மனஸ்தாபங்கள்தானே தீர்ந்துவிடும் என்றுதான் குடும்பத்தினரும் நினைத்தார்கள்.

வலுவாக முற்றிய பிரச்னை: ஆனால் அது நாளடைவில் பெரிதாகிக்கொண்டே சென்றது. எவ்வளவு முயன்றும் அதனை குறைக்கவே முடியவில்லை. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் இடையே விரிசல் மேற்கொண்டு விரிவடைந்தது. ஒருகட்டத்தில் இனியும் சேர்ந்திருப்பது வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த ரவி; ஆர்த்தியை பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். ரவி அவ்வாறு அறிவித்தாலும்; இந்த பிரச்னையை சுமூகமான முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்பதில் ரொம்பவே மெனக்கெட்டார் ஆர்த்தி.

Also Read
திருமணத்துக்கு பிறகு சூப்பர் ஃபீலிங்.. சங்கீதா பற்றி விஜய் பெருமிதம்.. இப்படியும் நினைச்சிருக்காரே
திருமணத்துக்கு பிறகு சூப்பர் ஃபீலிங்.. சங்கீதா பற்றி விஜய் பெருமிதம்.. இப்படியும் நினைச்சிருக்காரே

கெனிஷாவுடன் பழக்கம்: இருப்பினும் அவர் எடுத்த முயற்சிகளுக்கு எல்லாம் ரவி பிடிகொடுக்கவே இல்லை. ஒருகட்டத்தில் நீதிமன்றத்துக்கு சென்று சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். இதற்கிடையே பின்னணி பாடகி கெனிஷாவுடன் ரவிக்கு ஏற்பட்ட பழக்கம் நட்பை தாண்டியும் சென்றது. கெனிஷாவுடன் ரவி நெருக்கமாக இருந்தாலும், இந்த பிரிவுக்கு பிறகு ஆர்த்தி சிங்கிளாகவே இருந்துவருகிறார். பெரும்பாலும் தனது மகன்களுடன் நேரம் செலவிடுவதை அதிகரித்திருக்கும் அவர்; கெனிஷா - ரவி பற்றி பெரும்பாலும் பேசுவதில்லை.

ஆர்த்தியின் இன்ஸ்டா போஸ்ட்: அதேசமயம் ஆர்த்தியின் ஆதரவாளர்கள் அனைவருமே கெனிஷாவை லெஃப்ட் ரைட் வாங்கிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக ஒரு தம்பதியை பிரித்து அவர் பாவம் செய்துவிட்டார் என்றும் கொதித்து பேசுகிறார்கள். இந்நிலையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவர் கூறியிருப்பதை தனது ஸ்டோரியில் வைத்திருக்கிறார். அந்த ஸ்டோரியில், "யார் யாருக்கு துரோகம் செய்தார்கள். கணவரா இல்லை மனைவியா என்பது முக்கியம் இல்லை. இரண்டு பேரின் பக்கமும் இருக்கும் கதையை கேட்காமல் உண்மையை அறிய முடியாது.

அதெல்லாம் வேண்டும்: ஆனால் பெண்களைத்தான் சமூகம் குறை சொல்வதில் வேகமாக இருக்கிறது. என்ன நடந்தாலும் யாருடைய தவறாகவே இருந்தாலும் குற்றச்சாட்டு பெண்களை நோக்கித்தான் வருகிறது. பெண்ணாக இருப்பது கடினம். அதிலும் அம்மாவாக இருப்பதும் இன்னும் பெரிய பொறுப்பு. வலி. இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சுமப்பது எளிதானது இல்லை. அதை எல்லோரும் புரிந்துகொள்ளவும் முடியாது. எனவே தீர்ப்புக்கு பதில் கருணையை தேர்வு செய்யலாம். உங்களுக்கு இன்னும் அதிகமான மன வலிமை கிடைக்கட்டும் ஆர்த்தி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X