விடுதலை.. விடுதலை.. விடுதலை.. ஜூலை மாதம் ஆர்த்தி ரவி என்னவெல்லாம் பண்ணியிருக்காரு பாருங்க!
சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்த நிலையில், ஒரு பக்கம் கெனிஷாவுடன் ரவி மோகன் இலங்கையில் டூர் அடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தனது வாழ்க்கையை தனது இரு மகன்களுடன் ஜாலியாக கழித்து வரும் போட்டோக்களை ஆர்த்தி ரவி சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
திருமணம் செய்து தாஜ்மகாலுக்கு எல்லாம் சென்று ஒருவரை ஒருவர் எந்தளவுக்கு காதலித்து வருகிறோம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களை எல்லாம் திடீரென டெலிட் செய்துவிட்டு 2 மகன்கள் வளர்ந்துவிட்ட நிலையில், இருவரும் பிரிவார்கள் என்பதை கொஞ்சமும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இருவருக்கும் இடையே விரிசல் விட்டு விட்டது.

மாமியார் தயாரிப்பில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமத்துப் பையனாக இருந்த ரவி மோகன் தனியாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து தனக்கான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
ஜூலை மாதம் ஜாலி: ஆரம்பத்தில் ஜெயம் ரவி தன்னை விட்டுச் சென்றதால், அந்த வலி தாங்க முடியாமல் தொடர்ந்து பல பதிவுகளை போட்டு வந்த ஆர்த்தி ரவி, இதற்கு மேல் நாமும் நம் குழந்தைகளுடன் நல்லா வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் ஜூலை மாதம் மும்பைக்கு சென்றது, மற்றும் பல்வேறு இடங்களுக்கு காரில் டூர் சென்ற போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
2 மகன்களூடன் லூட்டி: 14 வயதில் ஒரு மகனும் 10 வயதில் இன்னொரு மகனும் சிங்கம் போல இருக்கும் போது, நாம் ஏன் கவலைப்பட்டுக் கொண்டு பசங்களோட வாழ்க்கையையும் வீணடிக்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட ஆர்த்தி ரவி தனது 2 மகன்களுடன் ஜாலியாக லூட்டி அடிக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார். லாஃபிங் புத்தா, அடர்த்தியான கூந்தல், நாய்க்குட்டி, சாமி கும்பிடுவது, கேக் சாப்பிடுவது என வாகாய் வாழ்ந்த ஜூலை மாத வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார். இதே போல எப்போதுமே ஹேப்பியா இருங்க ஆர்த்தி என ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











