ஆர்த்தி ரவி செமயா என்ஜாய் செய்றாங்களே.. திரிஷாவும் கூட்டு.. சோகத்தை தூக்கி தூர போடு

சென்னை: நடிகர் ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை தற்போது பிரிவில் இருக்கிறது. ரவியுடன் எப்படியாவது சேர்ந்து வாழ்ந்துவிட வேண்டும் என ஆர்த்தி எடுத்த முயற்சி ஒவ்வொன்றும் தோல்வியில்தான் முடிந்தது. விரைவில் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரவி மோகனுக்கும், சுஜாதா என்பவரின் மகள் ஆர்த்திக்கும் ஏற்பட்ட காதலுக்கு முதலில் ரவியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. அவர்கள் இரண்டு பேரும் குஷ்பூ மூலம்தான் பழக்கம் ஆனார்கள். எனவே அவர்கள் காதல் திருமணத்தில் முடிவதற்கு ரவி வீட்டில் அமர்ந்து பேசி சம்மதம் வாங்கியவர் குஷ்பூதான். அதனையடுத்து இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

சுமூகமான வாழ்க்கை: திருமணம் முடிந்த கையோடு இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றார்கள் அந்தத் தம்பதியினர். தொடர்ந்து சுமூகமாக தங்களது திருமண வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். கோலிவுட்டின் ரியல் ஜோடிகளில் அனைவரையும் கவர்ந்த ஜோடி என்று பெயரும் பெற்றார்கள். பார்ட்டியோ, வெளிநாட்டு டூரோ, சினிமா நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் ரவியுடன் பெரும்பாலும் ஆர்த்தியும் ஆஜர் ஆகிவிடுவார்.

Aarti Ravi Trisha and Khushboo recent reunion photos are making waves on social media
Photo Credit:

பிரச்னையில் திருமண வாழ்க்கை: இது ஒருபக்கம் இருக்க ஆர்த்தியின் தாய் சுஜாதா சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். தனது மருமகன் ரவியை வைத்து படங்களை எடுத்தார். ஆனால் அவை சரியாக போகவில்லை. அதிலிருந்து அந்தக் குடும்பத்துக்குள் பிரச்னைக்கான விதை விழுந்தது. தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருந்த பிரச்னை ஒருகட்டத்தில் பெரிதாகி வெடித்துவிட்டது. இதன் காரணமாக ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று ரவி மோகன் கோர்ட்டுக்கு சென்றுவிட்டார்.

ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி: ஆனால் இந்த விவாகரத்து முடிவு தன்னிடம் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டது என்று சொல்லி ரவியுடன் பேசவும், பிரச்னையை தீர்க்கவும் பல முயற்சிகளை எடுத்தார் ஆர்த்தி. ரவியோ விட்டுக்கொடுப்பதாக இல்லை. அதனையடுத்து ரவி மோகன் தனக்கு ஜீவனாம்சமாக மாதம் 40 லட்சம் ரூபாய் தர வேண்டும் என குண்டை போட்டார். இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. எப்படியானாலும் ஆர்த்தியை பிரிவதில் ரவி மிக உறுதியாக இருக்கிறார்.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: விரைவில் அவர்களுக்கு சட்டப்பூர்வ விவாகரத்து கிடைக்கவிருக்கிறது. அநேகமாக மகன்கள் ஆர்த்தியுடன் இருப்பார்கள் என கருதப்படுகிறது. ரவியை பிரிந்த ஆர்த்திக்கு உள்ளுக்குள் சோகம் இருந்தாலும் அதை வெளியே பெரும்பாலும் காண்பித்துக்கொள்வதில்லை. வெளிநாடுகளுக்கு செல்வது, தோழிகளுடன் நேரத்தை செலவழிப்பது என தனது கவனத்தை வேறு விஷயங்களில் ஈடுபடுத்திவருகிறார்.

அந்தவகையில் இப்போது சில புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. அதாவது ஆர்த்தி ரவி, திரிஷா, குஷ்பூ, பிருந்தா மாஸ்டார், ஆர்த்தியின் தாய் சுஜாதா, குஷ்பூவின் மகள் ஆகியோர் ஒரு வீட்டில் கூடி ஜாலியாக பேசி நேரத்தை செலவிட்டிருக்கின்றனர். அதிலும் அப்புகைப்படைத்தில் திரிஷாவும், ஆர்த்தியும்தான் அதிகமாக சிரித்தபடி இருக்கிறார்கள். இப்புகைப்படங்களை பிருந்தா மாஸ்டரும், ஆர்த்தியும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X